பொசுக்குனு டிராக்கை மாற்றிய வடிவேலு...! கடைசில எங்க வந்து நிக்கிறாரு பாருங்க..!
தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று செல்லம்மாக அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. அந்த காலங்களில் நகைச்சுவை ஜாம்பவானாக இருந்த கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடியில் பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கவுண்டமணி, செந்தில் சினிமாவில் இருக்கும் போதே திரையுலகத்தில் நுழைந்தார் வடிவேலு.
தன்னுடைய தனித்துவமான முக பாவனைகளால் மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு காமெடி ஜாம்பவான்களுக்கும் என ஒரு டீம் இருக்கும். கவுண்டமணியும் அதை பின்பற்றி வந்தார். வடிவேலுவும் தனக்கென ஒரு டீம் அமைத்து படங்களில் காட்டி வந்தார்.
வடிவேலுவின் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெற்றியடைந்தன. நகைச்சுவை தவிர்த்து பாடுவதிலும் வல்லவர் நடிகர் வடிவேலு. சினிமாவில் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார். சினிமாவிற்கு ஒரு நீண்ட இடைவெளி கொடுத்து மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா ஒவ்வொரு ஊருக்கும் சென்று தன் இசை பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இருக்கிறார்.
அதே வழியில் தற்போது வடிவேலுவும் இணைகிறார். வருகிற ஜூன் 26 ஆம் தேதி மதுரை ஒத்தக் கடையில் இசைஞானியுடன் சேர்ந்து வடிவேலுவும் சேர்ந்து நேரடியாக மக்களை சந்தித்து கச்சேரி பண்ண இருக்கின்றனர். அவரும் பாட இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.