வீரதீர சூரன் படத்தின் 3வது நாள் வசூல்… இத்தனை கோடியா?

veeradheerasooran
veeradheerasooran: நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்து கம்பேக் கொடுத்துள்ள படம் வீரதீர சூரன். இந்தப் படத்தில் தூள் படத்தில் பார்த்த விக்ரத்தைப் பார்க்கலாம். படம் முதல் நாளில் சில சிக்கல்களால் தாமதமாகவே ரிலீஸ் ஆனது.
27.3.2025 அன்று மாலை தான் படம் ரிலீஸ் ஆனது. கடைசியில் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியான எம்புரானைக் காட்டிலும் தமிழகத்தில் வசூலில் முந்திவிட்டது. அந்த வகையில் விக்ரம் படத்திற்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே மாஸாக உள்ளது. படத்தில் பிருத்விராஜ், துஷாரா நடிப்பு அருமை. விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. ஜி.வி.பிரகாஷின் இசை பல இடங்களில் நமக்கு ஒரு உற்சாகத்தைத் தருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ்சுக்கு முன்னர் தெறிக்க விடுகிறது.
படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கடைசி வரை எந்தவிதமான சலிப்போ, அலுப்போ இல்லாமல் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
சில படங்களில் எப்போதும் கண்மூடித்தனமாக ஆக்ஷன் சண்டைகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் வெறும் டயலாக்கின் மூலம் மட்டுமே ஆக்ஷனைக் காட்டி இருப்பது இயக்குனரின் டச் என்றே சொல்லலாம்.
இந்திய அளவில் வீரதீர சூரனின் வசூல் எப்படின்னு பாருங்க. முதல் நாளில் 3.4 கோடி, 2வது நாளில் 3.5 கோடி, 3வது நாளில் 5.25கோடி என வசூல் செய்துள்ளது. மொத்தம் 12.15கோடி வசூலித்துள்ளது. முதல் இருநாள்களை விட 3ம் நாள் வசூல் எகிறியுள்ளது. இன்று ஞாயிறு, நாளை ரம்ஜான் என தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.