வீரதீரசூரனுக்கே இந்த நிலைமையா? ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இப்படி சிக்கிட்டாரே!

veeradheerasooran2
Veeradheerasooran: சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வீரதீர சூரன் படம் வெளியானது. இது விக்ரமுக்கு கம்பேக் என்றே சொல்லலாம். பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
தில், தூள் படத்தில் பார்த்த விக்ரம் கண்ணுக்குத் தெரிகிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்க விடுகின்றன. விக்ரம் ரசிகர்களுடன் இருந்து படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தியேட்டர்களுக்கு நேரடியாக விசிட் அடித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று விக்ரம் திண்டுக்கல்லில் வீரதீர சூரன் படம் வெளியான ஒரு திரையரங்கிற்கு விக்ரமும், துஷாரா விஜயனும் சென்றனர். விக்ரம் கார் வந்தபோது அவரை இறங்கவிடாமல் கார்மீது ரசிகர்கள் ஏறியதால் அவர் கோபமுற்றார்.
அதன்பின் வந்த பவுன்சர்கள் விக்ரமைப் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றனர். திரையரங்கம் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததால் ரசிகர்களைப் பார்க்காமல் மீண்டும் வெளியேறினார்.
சினிமாவில் ரசிகர்கள் இருக்க வேண்டியதுதான். ஆனால் எல்லாமே ஓரளவுக்குத்தான். அது அன்புத் தொல்லையானாலும் ஒரு லிமிட் தான். அதுக்கு மேலப் போனால் யாருக்குமே டென்ஷன் வரத்தான் செய்யும். சென்னையிலும் விக்ரம் படம் பார்த்து முடித்து திரும்பி வரும்போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் ஆட்டோ பிடித்துத் தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓடிவந்தார். அதுமாதிரி தான் இங்கும் நடந்துள்ளது. வீரதீர சூரனுக்கே இந்த நிலைமையா? வீர தீர சூரன்னா படத்தில் மட்டும்தானா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்க்க இந்த லிங்கைக் கிளிக் பண்ணுங்க: