வில்லனே ஓடி ஒளியறாரு… ஹீரோன்னா ரொமான்ஸ் பண்ணனுமா? வழக்கம்போல வீரதீர சூரனைப் பங்கம் பண்ணிய புளூசட்ட மாறன்

by sankaran v |   ( Updated:2025-03-28 06:35:05  )
veeratheerasooran 2
X

veeratheerasooran 2

விக்ரம் நடிக்க அவருக்கு பெரிய கம்பேக் கொடுத்த படம் வீரதீர சூரன் என்று சொல்லப்படுகிறது. நேற்று இந்தப் படம் ரிலீஸ் ஆனது. எஸ்யு.அருண்குமார் இயக்கத்தில் வெளியான வீரதீர சூரன் படம் எப்படி இருக்குன்னு பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

மதுரைல அப்பாவும், மகனுமா 2 ரவுடிகள் இருக்காங்க. ரவுடித்தனம்தான் அவங்களோட முக்கிய தொழில். அதை வச்சே பல தொழில்கள் செஞ்சு பெரிய ஆளா ஆகறாங்க. அங்க இருக்குற ஒரு எஸ்பி. கேப் கிடைக்கும் போது இவங்களை என்கவுண்டர்ல போட்டுடணும்னு சந்தர்ப்பம் பார்த்துக்கிட்டு இருக்காரு.

அதைத் தெரிஞ்சிக்கிட்ட இந்த ரவுடிங்க அதுக்கு முன்னால நாம இவனைத் தூக்கணும்னு பார்க்கறாங்க. அதுக்காக விக்ரமைப் போய்ப் பார்க்கறாங்க. முதலில் அந்த எஸ்பியை கொல்ல விக்ரம் மறுக்கிறார். அப்புறம் ஒரு கட்டத்துல ஒத்துக்குறாரு.

படத்தோட ஆரம்பம் விறுவிறுப்பா இருக்கு. அப்புறம் தொய்வாப் போகுது. அதுக்கு என்ன காரணம்னா படத்துல சொல்றமாதிரி வில்லன் இல்லை. முதல் ரீல்லயே வில்ன் ஓடிப்போயி ஒளிஞ்சிக்கிறாங்க.

அதுலயாவது என்ன ஏன்னு சுவாரசியத்தைக் காட்டி இருக்கலாம். அதுவும் இல்லை. படத்துல நேரடி வில்லனே தெரியல. எல்லாருமே சூழலுக்கு ஏற்ப வில்லனா இருக்குறாங்க. அப்புறம் படத்துல டுவிஸ்ட்டுன்னு பார்த்தா எதுவுமே இல்லை. இடைவேளையாவது நல்லா இருக்கும்னு பார்த்தா அது தான் பிரச்சனை.

veeratheera sooran poster10 வருஷத்துக்கு முன்னால ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ். இந்தக் கதை உள்ள படத்துல ரொமான்ஸ் கட்டாயமா? ஹீரோ, ஹீரோயின்னா ரொமான்ஸ் பண்ணித்தான் ஆகணுமா? சீரியஸ் கதையில இப்படி ஒரு ரொமான்ஸ் தேவையா? கிளைமாக்ஸ்ல போயி சிங்கம் பாட்டைப் போட்டு விடுறாங்க. ஆடியன்ஸை அப்படியே டைவர்ட் பண்ணிட்டாங்க.

எஸ்ஜே.சூர்யா தனக்குக் கீழே உள்ள அதிகாரிகள்கிட்ட எப்படி என்கவுண்டர் பண்ணனும்னு சொல்லிக்கொடுப்பாரு. அதுல அருமையா நடிச்சிருப்பாரு. அதே மாதிரி சூரஜ் விக்ரமை சந்தேகப்பட்டு சில கேள்விகள் கேட்பாரு. அதுல அற்புதமா நடிச்சிருப்பாரு. இந்தப் படத்துல கதையைக்கூட ஓரளவு தேத்திறலாம். கொஞ்சம் திரைக்கதையில ஒர்க் பண்ணிருக்கலாம்.

ரெண்டு பேரு ரகசியமா ஒரு தடவை பேசுவாங்க. பாத்ரூம்ல இருந்து ஒருத்தன் ஒட்டுக் கேட்பான். அந்த மாதிரி சுவாரசியம் 10 இடத்துல இருந்தா போதும். இந்தப் படம் ரசிக்கும்படியா இருந்துருக்கும். இப்ப இந்தப் படம் ரொம்ப ரொம்ப சுமாரான படமா போயிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story