More
Categories: Cinema History Cinema News latest news

இது மட்டும் தான் அவரு கண்ணுக்குத் தெரியும்….! ஷங்கரைக் கழுவி ஊற்றும் பிரபலம்

இந்தியன் 2 பட இன்ட்ரோ பற்றியும், டைரக்டர் ஷங்கர் பற்றியும் பிரபல யூடியூபர் வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

இந்தியன் 2 படத்துல மியூசிக் முதல் பாகத்துல போட்ட மாதிரி இல்ல. அதுல ஏஆர் ரகுமானோட இசைல எல்லாப் பாடல்களுமே சூப்பர் டூப்பர்ஹிட். அதுல வர்ற பச்சைக்கிளிகள் பாட்ட இந்தப் படத்துலயும் அப்படி இப்படி வச்சிருக்காங்க போலருக்கு.

Advertising
Advertising

Vellaichamy

இதுல அனிருத் மியூசிக் இதுவே கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துருக்கு. இந்தியன் 1ல ஏஆர் ரகுமானோட பாடல் சூப்பரா இருந்தது. அனிருத்தோட இசைல பாட்டு நிக்குமான்னா நிக்காது. இப்படி சொன்னா ஒரு சிலரு ட்ரெண்டுன்னு சொல்வாங்க.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பெரும்பாலான படங்கள் இடஒதுக்கீடு பற்றியும், லஞ்ச ஊழல் பற்றியும் தான் வருகிறது. அதிலும் அடித்தட்டு மக்கள் படும் அவலத்தையே இந்தியனும் சரி. ஜென்டில் மேனும் சரி. தோலுரித்துக் காட்டுகிறது.

ஜென்டில்மேன் படம் இடஒதுக்கீடு பற்றிப் பேசுனது. அதனால தான் எனக்கு வரக்கூடிய வாய்ப்பு போச்சுன்னு படத்துல ஒரு கதாபாத்திரம் பேசுது. இந்த நாட்டுல சமூகநீதின்னு ஒண்ணு இருக்குங்கறது ஷங்கருக்குத் தெரியுமா? அவங்களை சுற்றி இருக்குறவங்களுக்குத் தெரியுமா? இல்ல… திட்டமிட்டு மறைக்கிறாங்களா?ங்கற கேள்வியே அதுக்குள்ள இருக்கு.

இட ஒதுக்கீடுன்னு ஒண்ணு வரலன்னா ஷங்கர் சொல்ற பாணில கருப்பா இருக்குறவங்கள்லாம் வேலைக்குப் போயிருக்க முடியாது. கருப்பா இருக்குறவங்கள்லாம் படிச்சிருக்க முடியாது. கருப்பா இருக்குறவங்கள்லாம் அதிகாரத்துக்கு வந்துருக்க முடியாது.

ஷங்கர் மாதிரி இயக்குனர்களுக்கு என்ன பிரச்சனைன்னா கருப்பா இருக்குறவங்க அதிகாரத்துக்கு வர்றது தப்பு. ஏழை எளியவன் அதிகாரத்துக்கு வர்றது தப்பு. பெரும்பான்மை மக்கள் அதிகாரத்துக்கு வர்றது தப்பு. இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப சிறப்பா ரொம்ப அழகா கம்பி கட்டி மறைச்சிருவாரு.

அதே மாதிரி முதல்வன் படத்துலயும் கிட்டத்தட்ட இதே மாதிரி விஷயங்களைத் தான் வச்சிருப்பாரு. கணக்குப் பண்ணிப் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட அது வந்து கலைஞருக்கு எதிரான படமாவே இருக்கும். ஒரு கலவரம் நடக்கும்.

ஆளாளுக்கு ஓடுவாங்க. ஒருவன் காப்பாத்தப் போவான். உயர்சாதிய சேர்ந்தவன் மட்டும் இந்தி இங்கிலீஷ் பேப்பர பஸ்சுக்குள்ள உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருப்பாரு. அதுலயும் இன்னொருத்தன பார்த்தா ஒரு நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவன திருடன்கற மாதிரி பண்ணிருப்பாரு.

அந்நியன்ல பார்த்தா கருப்பா இருக்குறவன பூராம் தேடிப்பிடிச்சிக் கொல்வாங்க. ஏன்னா அவன்லாம் இதுக்கு எதிரானவன். அவன் எச்சி துப்புனது தப்பு. காரித்துப்புனது தப்பு. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்களுக்கு எதிரானதா கட்டமைக்கப்படுது.

இன்னிக்கி முழுக்க முழுக்க ஊழல் தான் முக்கியமானது அப்படின்னு பேசுறது இருக்குல்ல. இதை விட அபத்தம் உலகத்துலயே கிடையாது. சாதீய நெருக்கடி, மத மோதல் இதெல்லாம் இருக்கக்கூடிய காலம் இது.

எந்தப் படைப்பாளி சிறந்தவர்னா இதே மாதிரி மக்கள் முன்னுக்கு வர்ற பிரச்சனையை எடுத்துப் பேசறவன் தான் ஒரு சிறந்த படைப்பாளி. இந்த மாதிரி பிரச்சனையை ஷங்கர் பேசமாட்டார். பெரும்பான்மையான மக்களுக்கு எதிராத் தான் அவருடைய படங்கள் இருக்கும்.

Published by
sankaran v