உயிர் முக்கியமா? வாணிஸ்ரீ கால்ஷூட் முக்கியமா? மருத்துவமனையில் துடித்த பாலச்சந்தர்!..
KBalachander: தமிழ் சினிமா வளர்ச்சி அடைய முக்கியமாக இருந்த ஒரு இயக்குனர் என்றால் அது பாலச்சந்தர் தான். அவரின் படக்கதையில் இருந்து கதாபாத்திர தேர்வு வரை அத்தனை அம்சமாகவே இருக்கும். அவருடைய தேர்வு தான் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்.
கொஞ்சம் அல்ல நிறையவே போராடி அவருக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் தான் பாலச்சந்தர். அப்படிப்பட்டவர் தன்னுடைய கதையை யாருக்காகவே மாற்றிக்கொண்டதே இல்லையாம். ஏன் அவர் குறித்த நாளில் தன் படத்துக்காக எல்லாத்தையையுமே செய்து விடுவாராம். அது என்ன பிரச்னையாக இருந்தாலும் சரி.
இதையும் படிங்க: ஆமா அவன்லா ஒரு ஆளு! கலைஞர் 100 விழாவில் பரிதாபத்துக்குள்ளான வடிவேலு – என்ன மேட்டர் தெரியுமா?
அப்படி ஒருமுறை, 1972-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானது வெள்ளி விழா. ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த இந்த படத்தில் வாணிஸ்ரீ முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவர் 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்ததால், முதலில் அவர் காட்சிகளை படமாக்க பாலச்சந்தர் முடிவெடுத்தாராம்.
பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்க ஒரு நாள் திடீரென பாலச்சந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.இருந்தும் அந்த வலியை யாரிடமும் சொல்லவே இல்லையாம். வியர்க்க வியர்க்க துடைத்து கொண்டே படப்பிடிப்பை நடத்தி வந்து இருக்கிறார். இதை பார்த்த தயாரிப்பு நிறுவனம் தான் உடனே ஒரு மருத்துவரை அழைத்து வந்து செக் செய்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அடடா! இப்படி ஓபனா கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்? பிரதீப் கேள்வியால் திணறிய பூர்ணிமா!..
அதை தொடர்ந்து அங்கிருதவர்கள் உங்க உடம்பு முக்கியமா? கால்ஷூட் முக்கியமா? எனக் கேட்டு மருத்துவமனையில் சேர்த்தார்களாம். பின்னர் மூன்றரை வாரங்கள் மருத்துவமனையில் இருந்த பாலச்சந்தர் பெரிய கேப்புக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து அந்த படத்தினை முடித்தாராம். படம் சுமார் வெற்றி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.