பொன்னியின் செல்வன் படத்துக்கு டஃப் கொடுக்கும் வேள்பாரி... முக்கிய முடிவெடுத்த படக்குழு
வரலாற்று புனைவுகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொன்னியின் செல்வன் திரைப்படம் நிரூபித்துவிட்டது. இதை தொடர்ந்து, மற்றொரு நாவலான வேள்பாரி படமாக்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இதன் ஒரு சண்டை காட்சியை இதுவரை தமிழ் சினிமா பார்க்காத அளவு பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
வரலாற்று புனைவு நாவலான வீரயுக நாயகன் வேள்பாரியை படமாக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகியது. அதையும், சூர்யா சூசகமாகவே அறிவித்தார். எழுத்தாளர் மற்றும் எம்பி சு.வெங்கடேசன் எழுத்தில் வெளியான இந்நாவலுக்கு ரசிகர்கள் ஏராளம். பொன்னியின் செல்வனை தொடர்ந்து இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிற துவங்கி விட்டது.
பாரிவேடத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இப்படத்தினை இயக்க இருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு 1000 கோடி ரூபாய் பட்ஜெட் எனக் கூறப்படுகிறது. மேலும், பாரியின் மகளான அங்கவை மற்றும் சங்கவை பேரழகிகள். அவர்களுக்கு யாரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இப்போதே சிலரிடம் துவங்கி விட்டது. இதன் காரணமாக, சிவாஜி படத்தில் அங்கவை மற்றும் சங்கவை குறித்து சங்கர் ஒரு காட்சி வைத்திருந்தார். அது பலராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாரி மன்னனை எதிர்த்து முவேந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் இணைந்து போர் புரிவார்களாம். துறைமுகத்தில் நடக்கும் இக்காட்சிக்கு தான் படக்குழு பெரிதாக திட்டமிட்டு வருகிறது. கோலிவுட் இதுவரை பார்த்திராத காட்சிகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் பெரிய பட்ஜெட் இந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் ட்விஸ்ட்…! அந்த நடிகரின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….