போதை பழக்கத்துக்கு அடிமையான சில்க் ஸ்மிதா- தற்கொலைக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? பகீர் கிளப்பும் இயக்குனர்…
80களின் கவர்ச்சி புயலாக வலம் வந்த சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில்க் ஸ்மிதா தற்கொலைக்கான காரணம் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
சில்க் ஸ்மிதா உச்ச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தபோது ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்ததாக அவருடன் பழகிய பலரும் கூறுகின்றனர். இவர் சற்று வயதானவர் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேலு பிரபாகரன், சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணனை காதலித்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் நடுவில் சில காலங்கள் விரிசல் விழுந்தது, அந்த இடைப்பட்ட காலங்களில் சில்க் ஸ்மிதா தன்னையும் காதலித்தார் என கூறியுள்ளார்.
அதே போல் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணனின் மகனையும் காதலித்ததாக வேலு பிரபாகரன் கூறுகிறார். இந்த நிலையில் அதே பேட்டியில் வேலு பிரபாகரன், சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கான காரணத்தை குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சில்க் ஸ்மிதா தகாத உறவு வைத்திருந்ததால் அவருக்கு குற்றவுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் எனவும் மேலும் சில்க் ஸ்மிதா அந்த சமயத்தில் போதை மருந்துகளுக்கு அடிமையாக இருந்தார் எனவும் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
வேலு பிரபாகரன் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வந்தவர். சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்த சமயத்தில் வேலு பிரபாகரனையும் காதலித்துள்ளார். அதே போல் வேலு பிரபாகரன் ஜெயதேவி என்ற பெண் இயக்குனரை திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவையும் காதலித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிப்புல ஸ்கோர் பண்ண இப்படியெல்லாம பண்ணுவாங்க? அகங்காரத்தின் உச்சக்கட்டமாக பானுமதி