Connect with us
banu

Cinema History

நடிப்புல ஸ்கோர் பண்ண இப்படியெல்லாம் செய்வாரா பானுமதி!.. ரொம்ப ஓவரே இருக்கே!..

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை பானுமதி என்று சொன்னாலே அனைவரும் சொல்லுவது திமிரு, தான் என்ற அகங்காரம், தைரியமாக பேசக்கூடியவர், யாருக்கும் பயப்படாதவர் என்றுதான் சொல்வார்கள். அதே அளவுக்கு ஒரு நல்ல நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகி என ஒரு பன்முககலைஞராகவும் இருந்திருக்கிறார். எம்ஜிஆர் பெயரை ராமச்சந்திரன் என்று சொல்லி அழைத்த ஒரே நபர் பானுமதிதான். அந்த அளவுக்கு ஒரு தைரியமான பெண்ணாக வலம் வந்திருக்கிறார். பானுமதி நடிக்கும் படங்களில் வரும் பாடல்களை பானுமதியே தான் பாடுவாராம்.

banu1

banu1

பன்முகத்திறமையான நடிகை

எல்லா ஞானமும் வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமான நடிகை பானுமதி. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏவிஎம் ராஜன், சௌகார் ஜானகி, பானுமதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘அன்னை’. இந்தப் படத்தில் குழந்தை இல்லாத தாயாக பானுமதி நடித்திருப்பார். மேலும் தன் தங்கையான சௌகார் ஜானகியின் குழந்தையை பிறந்ததும் தன் அக்காவிடம் ஒப்படைத்து விடுவார் சௌகார். அந்த குழந்தையைத்தான் பானுமதி தன் குழந்தையாக வளர்த்து வருவார். அதனால் கொஞ்சம் திமிரு பிடிச்ச கதாபாத்திரமாகத்தான் பானுமதியின் கதாபாத்திரம் அமையும்.

banu2

banu2

அந்தப் படத்தில் ‘காயாகி பழமாகி  கனிந்த மரம் ஒன்று’ என்ற பாடல் வரும். அந்தப் பாடலை பானுமதி பாடியிருப்பார். மூன்று விதமான டிராக்குகளில் எடுத்திருப்பார்கள். அதில் சுதர்சனம் மாஸ்டர் ஒரு டிராக் நன்றாக இருக்கிறது என சொல்ல பானுமதியோ வேறொரு டிராக்கை ஓகே செய்து சூட்டிங்கிற்காக போகிறார்கள். அப்போது அந்த பாடலை போடும் போது திடீரென பானுமதி கட் கட் என சொல்கிறார். ஏனெனில் அது பானுமதி சொன்ன டிராக்கே கிடையாது. அதனால் சண்டை போடுகிறார். அதன் பின் கடைசியாக பானுமதி சொன்ன டிராக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சௌகாரை ஓவர் டேக் செய்ய நினைத்த பானுமதி

அதே போல் சௌகார் , பானுமதி சம்பந்தப் பட்ட காட்சிகளில் சௌகாரின் வசனம் கொஞ்சம் ரசிகர்களை ஈர்க்கும்ப் படியாக அமைய பானுமதிக்கோ சௌகார் ஸ்கோர் செய்து விடுவாரே என நினைக்கிறார். சூட்டிங்கோ போய்க் கொண்டிருக்கிறது. சௌகார் பேசி கொண்டிருக்கிறார். பானுமதியின் காட்சி வரும் போது திடீரென பானுமதி சத்தமாக இருமி விட்டாராம். உடனே அன்று நடக்க உள்ள காட்சிகள் ரத்தாகிவிட்டதாம்.

banu3

banu3

பானுமதிக்கோ நல்ல வேளை படமாக்கப்படவில்லை என்று நினைக்க மறு நாள் படப்பிடிப்பு முதலில் இருந்து எடுத்திருக்கிறார்கள். முந்தைய நாள் எடுத்ததில் சௌகார் போர்ஷனை மட்டும் கட் செய்து இதில் சேர்த்து விட்டார்களாம். ஆக பானுமதி நினைத்தது நடக்கவில்லை. நடிப்பிற்காக எதையும் செய்ய தயங்காதவராக இருந்திருக்கிறார் பானுமதி. இந்த சுவாரஸ்ய தகவலை ஏவிஎம்.குமரன் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க :அந்த நடிகருக்கெல்லாம் கதையை தர முடியாது!.. தயாரிப்பாளரிடம் இருந்து ட்ரிக்காக கதையை பிடிங்கிய சிம்பு..

google news
Continue Reading

More in Cinema History

To Top