More
Categories: Cinema News latest news

கொல மாஸ் சிம்பு…கவுதம் மேனன் இஸ் பேக்…வெந்து தணிந்தது காடு டிவிட்டர் விமர்சனம்….

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் சிம்பு ரசிகர்கள் அதிகாலை 5 மணி காட்சியே படத்தை பார்த்து ரசித்தனர். அதோடு, படம் எப்படி இருக்கிறது என்பதை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, கவுதம் மேனன் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதாகவும், சிம்புவின் நடிப்பு வெறித்தனமாக இருப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம், இப்படம் சிம்புவின் கேரியரில் அவருக்கு ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் ரூ.150 முதல் 200 கோடி வரை வசூலித்தால் ஆச்சர்யம் இல்லை எனவும்,3 மணி நேர படம் என்றாலும் போரடிக்கவில்லை எனவும், படம் பார்ப்பதற்கு முன் நன்றாக தூங்கிவிட்டு செல்லுங்கள் எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

கேங்ஸ்டர் சினிமாவில் இது ஒரு சிறந்த படம். சிம்பு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தியேட்டரில் சென்று பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

வழக்கம்போல் ஒருபக்கம் சற்று ஸ்பாய்லர் விமர்சனங்களும் இப்படத்திற்கு வருகிறது.

இயக்குனரின் முந்தைய படங்களை விட இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம். படம் பரபரவென செல்லும் என எதிர்பார்த்தவர்களுக்கு, அந்த செண்டிமெண்ட் காட்சிகளே ஒரு கட்டத்தில் ஸ்பீட் பிரேக்காக தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. படம் முடிந்த பிறகும் 20 நிமிஷம் இரண்டாவது க்ளைமாக்ஸ் ஓடுவது படத்தை முடிங்கடான்னு சொல்ல வைக்கிறது.

ஹீரோயின் ஏதோ பொம்மை போல வந்து போகிறார், வேறு ஹீரோயின் யாரையாவது நடிக்க வச்சிருக்கலாம். மற்ற நடிகர்களின் நடிப்பு காமெடி எல்லாம் வழக்கம் போல இருந்தாலும் ஓகே. பாடல் என்ற பெயரில் இசை பல இடங்களில் ஒப்பாரி வைக்கிறது, பின்னனி இசை ஓகே..மொத்தத்தில் இயக்குனரின் முந்தைய சில படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை’ என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Published by
சிவா