அஜித் கெட்ட வார்த்தை சொல்லுவாரு.. ஆனா விஜய் அப்படி இல்ல… வெங்கட் பிரபுவின் சொன்ன சீக்ரெட்
Ajith: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் என இருவரையும் இயக்கியது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகராக கோலிவுட்டில் கால் பதித்த வெங்கட் பிரபு பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் அவர் அறிமுக நடிகர்களை வைத்து இயக்கிய சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக மாறினார்.
இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதுவரை அஜித்தை அப்படி ஒரு நடிப்பில் யாருமே பார்த்திருக்க முடியாது என்ற வகையில் திரைப்படம் அமைந்தது. ஆண்ட்டி ஹீரோவாக அஜித் அசத்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
அஜித்தின் சினிமாக்கு அருகில் தவிர்க்க முடியாத படமாகவும் மங்காத்தா அமைந்தது. இதைத்தொடர்ந்து, வெங்கட் பிரபு பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுக்கவில்லை. பல வருட இடைவேளைக்கு பிறகு சிலம்பரசனை வைத்து மாநாடு என்ற வெற்றி படத்தைக் கொடுத்து மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: இங்க இருந்துகிட்டு கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்! பெருசா சம்பவம் இருக்கு
அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். இப்படத்தின் வேலைகள் முடிந்து இன்னும் இரண்டே தினத்தில் ரிலீஸிருக்கு தயாராகி இருக்கிறது. இப்படி கோலிவுட்டில் இரண்டு துருவங்களை இயக்கிய வெங்கட் பிரபுவிடம் இவர்கள் கொடுக்கும் ஹக் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, இரண்டு பேருக்குமே படத்தை போட்டு காட்டிய போது என்னை கட்டி தழுவினர். இதில் விஜய் சார் ரொம்பவே கட்டுப்பாடான ஆள். எதையும் அவ்வளவு எளிதில் வெளியில் காட்டிவிட மாட்டார். இருந்தும் அவர் கொடுத்த அமைப்பில் அவரின் எமோஷனலை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இவருக்கு ரொம்பவே நேர்மாறானவர் அஜித் சார். அவரால் எமோஷனல் கட்டுப்படுத்த முடியாது. பரபரப்பாக இருப்பார். என்னை கட்டித் தழுவும் போதே தெரிந்துவிடும். விஜய் சாரிடம் வார்த்தைகள் கூட வராது. ஆனால் அஜித் சார் சில கெட்ட வார்த்தைகளில் சேர்த்து போட்டு பாராட்டி விட்டு தான் செல்வார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.