விஜயிற்கு என்னெல்லாம் நினைச்சீங்களோ… கோட்டில் அது இருக்கு.. வெங்கட் பிரபு கொடுத்த சூப்பர் அப்டேட்…

by Akhilan |   ( Updated:2024-08-14 08:33:31  )
venkat
X

Vijay: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திரைப்படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். விஜய், பிரசாந்த், பிரபு, அஜ்மல், லைலா, சினேகா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!

படத்தில் விஜயிற்கு இரண்டு கதாபாத்திரம் எனக் கூறப்பட்டது. இதில் ஒரு விஜயை ஆண்டி ஏஜிங் செய்து இளவயதில் காட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஎஃப்எக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தது. ஆனாலும் ஸ்பார்க் பாடலில் விஜயின் இளவயது கதாபாத்திரம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல், கோட் திரைப்படத்தில் இதுவரை வெளியான எல்லா பாடல்களுமே பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை. ஆனாலும் படக்குழு இது படத்திற்கு நல்லதாகவே அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஏமாற்றம் மட்டும் கொடுக்காமல் விட்டால் படத்திற்கு வசூல் கூவியும் எனவும் எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு இப்படம் குறித்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் கூடயா படம் பண்ணுற.. வெங்கட்பிரபுவிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்…

அதை எப்படி எதிர்கொண்டு பிரச்னையில் இருந்து மீண்டும் வருகிறார்கள் என்பது கதையாக அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இப்படமும் பக்கா ஆக்‌ஷன் கதையாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். மேலும், விஜய் சாரை ரொம்ப நாள் கழிச்சு நீங்க என்னென்ன செய்ய வேண்டும் என ரசிகர்கள் நினைச்சீங்களோ, அது எல்லாமே படத்தில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story