’குட் பேட் அக்லி’ அப்டேட் வந்தவுடனே பதறியடித்து வந்த வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட் குறித்து போஸ்ட்!

by Saranya M |   ( Updated:2024-03-14 19:52:14  )
’குட் பேட் அக்லி’ அப்டேட் வந்தவுடனே பதறியடித்து வந்த வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட் குறித்து போஸ்ட்!
X

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ள படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை பான் இந்தியா அளவில் கொண்டு செல்லப் போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் ஏங்கிப் போய் விடக் கூடாது என உடனடியாக வெங்கட் பிரபு போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: ஊத்துக்குளி வெண்ணை போல அழகு!.. மிச்சம் வைக்காம அழகை காட்டும் மாளவிகா மோகனன்…

நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அப்டேட்டை இவ்வளவு சீக்கிரமாக கொடுக்க முடியாது என சமீபத்திய பேட்டியில் கூறிய வெங்கட் பிரபு அஜித் குமாரின் பட அப்டேட் வந்ததும் இப்படி பதறியடித்து ஓடி வந்து அப்டேட் கொடுக்க என்ன அவசரம் என அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதே நேரத்தில் விடாமுயற்சி படம் என்ன தான் ஆச்சு என்றும் அஜித் குமார் அந்த படத்தை விட்டு விட்டு குட் பேட் அக்லி படத்தில் உடனடியாக நடிக்கப் போகிறாரா? என்றும் பேச்சுக்கள் பரபரப்பாகி உள்ளன.

இதையும் படிங்க: அப்போ அது மலையாள பிட்டு பட டைட்டிலா?.. அஜித்துக்குப் போய் இப்படி பண்ணிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!..

அஜித் குமார் கொடுத்த அதிகப்படியான கால்ஷீட்டுகளை மகிழ் திருமேனி விரையம் ஆக்கியதுதான் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெங்கட் பிரபு குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் கோட் அப்டேட் வருகிறது. அது ரொம்பவே வொர்த்தான அப்டேட் என பதிவிட்டுள்ளார்.

Next Story