ட்ரோல் லுக்கைக் கொண்டாட வைத்த வெங்கட்பிரபு... நடந்த விஷயம் என்னன்னு தெரியுதா?
கோட் படத்துல தான் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு முதன் முதலாக தளபதி விஜயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். வெங்கட்பிரபுவைப் பொருத்தவரை அவர் ஒரு படத்துக்குள்ள இறங்கிவிட்டாலே அவரது பேமிலி குரூப்பும் சேர்ந்து இறங்கிடும். அந்த வகையில் கோட் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தில் வைபவ், பிரேம்ஜி நடித்துள்ளார்கள்.
படத்தில் ஏஐ நுட்பத்தில் பவதாரிணியின் குரலும் பாடலில் சேர்த்துள்ளார்கள். இது மாதிரி பல விஷயங்கள் தளபதி விஜய் நடித்த கோட் படத்திலும் அரங்கேறியுள்ளது. வெங்கட்பிரபுவைப் பற்றி படம் சூட்டிங் நடக்கும் சமயத்தில் ஒரு விஷயம் பரபரப்பாக வைரல் ஆனது. அது என்ன விஷயம்? அப்படி அவர் என்னத்தை செஞ்சாருன்னு கேள்வி எழலாம். வாங்க பார்க்கலாம்.
கோட் பட சூட்டிங் டைம்ல கிளீன் ஷேவ் பண்ணிக்கிட்டு, கண்ணாடி போட்டுக்கிட்டு, முடியெல்லாம் முன்னாடி விட்டுகிட்டு தான் ரசிகர்களை சந்திச்சாரு. அப்போ அவர பார்த்துட்டு என்னய்யா இப்படி இருக்காருன்னு கிண்டல் பண்ணாங்க. அதே ஹேர் ஸ்டைல்ல வச்சி காட்றேன்டான்னு முடிவு பண்ணினேன். அண்ணன்கிட்ட சொன்னதும் அவரும் ஓகே சொன்னாரு.
தளபதி விஜய் அரசியலில் களம் கண்டுள்ளார். தற்போது கட்சித்தலைவராகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இவரது ஆழ் மனம் என்ன சொல்லுதுன்னு இன்னும் சில நாள்களில் அவர் நடத்தும் மாநாட்டில் தெரிந்து விடும்.
Also read: ஜெயலலிதா மாதிரி பண்றாரு… விஜயை விளாசிய தயாரிப்பாளர்!
விஜயின் சினிமா செல்வாக்கு அரசியலுக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் மட்டும் இந்தப் படம் தற்போது வரை 210 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம் தெலுங்கில் படம் எடுபடவில்லை. அங்கு விநியோகஸ்தர்களுக்கு 13 கோடி நஷ்டம் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை வரவழைத்துள்ளது.
அதே நேரம் கோட் படம் வெளிவருவதற்கு முன்பு வரை சோஷியல் மீடியாக்களில் 1000 கோடி வசூலை ஈட்டும் படம் இது தான் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சொன்னார்கள். என்னாச்சு என்று தான் கேட்க வேண்டும்.