'கோட்' வெற்றிக்கு மணிரத்னத்தை ஃபாலோ செய்கிறாரா VP? இது என்ன புதுசா இருக்கு?

Goat Movie: இன்னும் ஒரு வார காலம் தான் இருக்கிறது விஜய் ரசிகர்களின் திருவிழா ஆரம்பமாக. விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதற்காக டிஏஜிங் தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான முறையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவின் கடைசி படமான மாநாடு திரைப்படம் எந்த அளவு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது என அனைவருக்கும் தெரியும். அதனை எடுத்து அவர் எடுக்கப் போகும் திரைப்படம் தான் கோட்.

இதையும் படிங்க: மோகன், ராமராஜன் இதுல யாரு செகண்ட் இன்னிங்ஸ்ல கெத்து?

அதனால் இந்த படத்தின் மீது ஒரு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருக்கும் விஜய் அஜித் ஆகிய இருவரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வேண்டும் என ஆரம்பத்திலிருந்து சொல்லி வந்தவர் வெங்கட் பிரபு. ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஜய்க்கும் அப்படிப்பட்ட ஒரு வெற்றியை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இருந்தாலும் கோட் படத்தை பற்றி பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படவில்லையே ஏன் என தொகுப்பாளர் ஒருவர் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியிடம் கேட்டார். அதற்கு திருப்பூர் சுப்ரமணி கோட் திரைப்படத்தை அடக்கி வாசிப்பது நல்லது தான். அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படிங்க: 90 வயசு கிழவியா இருந்தாலும் விடமாட்டாங்க!… நைட் கதவை தட்டுவாங்க!.. நடிகை பகீர் பேட்டி..

அவரின் மீது ரசிகர்களின் கவனம் அதிகளவு திரும்பி இருந்தது .அதனால் அந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பரபரப்பாகவும் பேசப்பட்டது. ஆனால் வெங்கட் பிரபுவிடம் அப்படி ஒரு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இல்லை. இருந்தாலும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள் .இதற்கு உதாரணமாக மணிரத்தினம் படத்தை எடுத்துக் கொண்டால் அவர் எந்த படத்திற்கும் பெரிய அளவில் படத்தைப் பற்றி வெளியில் பேசவே மாட்டார்.

ஆனால் படம் ஹிட்டாகிவிடும். அது போல் தான் இந்த கோட் திரைப்படத்திற்கும். இதற்கு முன் வெளியான தங்கலான், அயலான் ,இந்தியன் 2, லால் சலாம் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் அந்த படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் படத்தின் நிலைமை என்னாச்சு என அனைவருக்குமே தெரியும் .அதனால் கோட் திரைப்படத்தை அடக்கி வாசிப்பதும் நல்லது தான் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி, கமல், ரஜினி கூட நடிச்சு கிடைக்காத மரியாதை… விஜய் கூட நடிச்சு கிடைச்சது! யாருப்பா அது?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it