விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

Published on: October 12, 2023
prashanth
---Advertisement---

Thalapathy 68: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஒருபக்கம் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது ஏற்கனவே வெளியான தகவல்தான்.

அதேபோல், இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதும், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரின் விஜயின் நண்பர்களாக நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டது. இப்படத்தில் ஜோதிகா நடிப்பதாக இருந்து பின்னர் அவர் மறுக்கவே அவருக்கு பதில் சினேகா நடிக்கவுள்ளார். மேலும் கொலை படத்தில் நடித்த மீனாக்‌ஷி சவுத்ரி இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் – விஜய் நடிக்க மறுத்த அந்த கதை!.. தில்லா இறங்கி சம்பவம் செஞ்ச நவரச நாயகன்…

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு விஜயை யூத்தாக காட்டவுள்ளனர். அதேபோல், இரட்டை வேடத்தையும் புதிய தொழில்நுட்பத்தில் சிறப்பாக காட்ட முடிவெடுத்த படக்குழு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவும் சென்று வந்தது.

புதிய தொழில் நுட்பம் மூலம் விஜயை வாலிப வயதில் காட்டவுள்ளனராம். விஜய் யூத் என்றால் அவரின் நண்பர்களாக வரும் பிரபுதேவா மற்றும் பிரசாந்தையும் யூத்தாக காட்ட வேண்டும் அல்லவா. பிரபுதேவா ஒல்லியாக எப்போதும் இளமையாகவே இருக்கிறார். ஆனால், பிரசாந்த் வெயிட் போட்டு ஆளே மாறிவிட்டார்.

இதையும் படிங்க: லியோ ரிலீஸ் அன்னைக்கே அஜித் செய்யப்போகும் சம்பவம்!. உங்க சண்டைய நிறுத்துங்கப்பா சாமி!..

எனவே, அவரையும் தொழில் நுட்பம் மூலம் யூத்தாக மாற்ற உள்ளனராம். இவர்களோடு சேர்த்து நடிகர் அஜ்மலும் நடிக்கவுள்ளார். இப்படி பல நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதாலும், புதுப்புது முயற்சிகளை வெங்கட்பிரபு எடுப்பதாலும் இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக விஜயையும், பிரசாந்தையும் 25 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து விஜய் பாடுவது போல ஒரு பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. விரைவில் படக்குழு வெளிநாடுகளிலும் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படிங்க: அவங்களால முடிஞ்சிது உங்களால ஏன் முடியல? சன் பிக்சர்ஸை வறுத்தெடுத்த ரஜினிகாந்த்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.