தளபதி 68 சும்மா தீயா இருக்கும்!.. இந்த படத்துல அத பண்னவே மாட்டேன்.. மனம் திறக்கும் வெங்கட்பிரபு..

Published on: August 11, 2023
thalapathy 68
---Advertisement---

லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் அரசியலில் முழு வீச்சில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் கதை அரசியல் சம்மந்தப்பட்டது.

படத்தில் விஜய் அரசியல் பேசுவார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று அந்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தளபதி 68 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க- விஜயுடன் கூட்டணினு சொன்னதும் அஜித்திடம் இருந்து வந்த கால்! வெங்கட் பிரபு பகிர்ந்த சீக்ரெட்

லியோ படம் வெளியாகும் நேரத்தில் தான் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கும். இந்த படம் நல்ல ஜாலியாக, எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும். அரசியல் சம்மந்தமாக இருக்காது என்று கூறி பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தற்போது லியோ படத்தில் கவனம் செலுத்துவோம். அடுத்து தளபதி 68இல் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நிருபர், தளபதி 68 படத்தில், விஜயை சூப்பர் ஸ்டார் என்று போடுவீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், அப்படியெல்லாம் போட மாட்டேன். தளபதி விஜய் என்று தான் போடுவேன். அதை தான் ரசிகர்களும் விரும்புவார்கள். படத்தில் மெசேஜ் எல்லாம் இருக்காது. எப்போதும் போல வெங்கட் பிரபு படம் போல ஜாலியான ஒரு படமாக தான் இருக்கும். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதும், முதல் ஆளாக அஜித் தான் எனக்கு வாழ்த்து கூறினார் என்று வெங்கட் பிரபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இதையும் படிங்க- அடுத்த விக்னேஷ் சிவன் ஆயிட்டா அசிங்கம்!.. பார்ட்டி பண்ணாம வேலை பார்க்கும் வெங்கட் பிரபு…

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.