Thalapathy 68: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் ஒருவழியாக கடந்த 19ம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களும், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும் இப்படத்தை காண வெறித்தனமாக காத்திருந்தனர். படம் இப்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல்பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் நன்றாக உழைத்திருக்கலாம். விஜய் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு இல்லை என பொதுவான சினிமா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: படம் பார்க்க அங்க போய்ட்டாங்க!.. வசூல்லாம் போச்சி!.. புலம்பும் லியோ பட தயாரிப்பாளர்….
லியோ படம் முடிந்த உடனேயே வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ஒரு புதிய பட வேலையை விஜய் துவங்கினார். இது விஜயின் 68வது திரைப்படமாகும். இப்படத்தின் பூஜை கடந்த 2ம் தேதி எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், சினேகா உள்ளிட்ட சில நடிகைகள் நடிக்கவுள்ளனர். மேலும் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த் ஆகியோரும் விஜயின் நண்பர்களாக நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் எடுத்தனர். அடுத்து இஸ்தான்பூல் மற்றும் தென்னாப்பிரிக்கா சென்று செமையான சண்டைக்காட்சிகளை எடுக்கவுள்ளனராம்.
இதையும் படிங்க: லியோ இத்தனை கோடி வசூல்னு நல்லா வடை சுடுறீங்க!.. புள்ளிவிபரத்தோடு புட்டு வைக்கும் புள்ளிங்கோ!…
லியோ அட ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் வேலைகள் துவங்கிவிட்டாலும் லியோ ரிலீஸ் ஆகும்வரை இந்த படம் பற்றி எந்த அப்டேட்டையும் வெளியிட வேண்டாம் என விஜய் சொல்லியதால் அமைதி காத்து வந்தார் வெங்கட்பிரபு. பூஜை தொடர்பான புகைப்படத்தை கூட அவர் வெளியிடவில்லை.
தற்போது லியோ படம் வெளியாகிவிட்டதால் வருகிற ஆயுத பூஜையன்று தளபதி 68 பட பூஜை வீடியோவை வெங்கட்பிரபு வெளியிடவிருக்கிறாராம். அந்த வீடியோவுக்கு பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்து வருகிறாராம். எனவே, வருகிற ஆயுத பூஜை விஜய் ரசிகர்களுக்கு விருந்துதான்.
இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..
