Home latest news Mankatha: அப்படி மட்டும் செஞ்சா திட்டுவாரு! அஜித் குறித்து வெங்கட் பிரபு சொன்ன விஷயம்

Mankatha: அப்படி மட்டும் செஞ்சா திட்டுவாரு! அஜித் குறித்து வெங்கட் பிரபு சொன்ன விஷயம்

nvenkat
nvenkat

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ஐம்பதாவது திரைப்படம். 2011 ஆம் ஆண்டு அந்த படம் வெளியானது. அந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் ஹீரோவா அல்லது வில்லனா என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் அமைந்திருந்தது. ஆனால் நெகட்டிவ் ஷேடில்தான் அவருடைய பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தை ரசிகர்கள் படம் வெளியான போது பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

அதைவிட ரீ ரிலீஸிலும் ஒரு திருவிழாவாகவே கொண்டாடி தீர்த்துள்ளனர். இந்த படத்திற்கு பிறகு தான் எந்த ஹீரோ வில்லனாக நடித்தாலும் அவர்களையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடிலும் ஒரு ஹீரோவாக மக்கள் முன் தன்னுடைய கேரக்டரை பிரதிபலித்து இருந்தார். இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவின் இசை பிஜிஎம் இரண்டும் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.

பொங்கல் ரிலீஸாக எந்த ஒரு பெரிய நடிகரின் படங்களும் வெளியாகாத நிலையில் அஜித்தின் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலை தந்தது. அதற்கு ஏற்ப ரீ ரிலீஸிலும் படம் கலெக்ஷனை அள்ளியது. இதற்கு முன் விஜய் நடித்த கில்லி திரைப்படம் தான் மறு வெளியீட்டில் அதிக லாபத்தை பெற்ற திரைப்படமாக அமைந்து இருந்தது.

இப்போது கில்லி திரைப்படத்தை விட அதிக லாபத்தை பெற்ற திரைப்படமாக மங்காத்தா திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித் பற்றி ஒரு விஷயத்தை .அதாவது மங்காத்தா ரீ ரிலீஸுக்கு படத்தை பார்ப்பதற்கு அஜித்தை அழைத்தீர்களா என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வெங்கட் பிரபு அப்படி கேட்டால் அவர் கண்டிப்பாக என்னை திட்டுவார் என சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

அதற்கு தொகுப்பாளர் நீங்க பொய் சொல்றீங்க சார். அவர் உண்மையிலேயே ஒரு அன்பான மனிதர். அந்த மாதிரி திட்டவே மாட்டார் என கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அப்படியெல்லாம் கிடையாது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அவர் என்னுடைய சகோதரர் மாதிரி. என்னிடம் ஃப்ரீயாகவே பேசுவார். ஒரு இயக்குனர் நடிகர் என்பதை தாண்டி நாங்கள் இருவரும் ஒரு சகோதரர் போல நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறோம் .அதுவும் ஜி படத்தில் அவருடன் சேர்ந்து நடித்ததில் இருந்தே எங்களுக்கு உண்டான அந்த நெருக்கம் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

Previous articleஉடனே சி.எம்-னா இப்டிதான் நடக்கும்!.. விஜயை போட்டு பொளந்த தயாரிப்பாளர்….
Next articleநீண்ட தலைமுடி.. தாடி!.. புது கெட்டப்பில் எஸ்.கே!.. அடுத்த படத்துக்கா?!…