ஏம்ப்பா.. தலன்னு சொன்னது அவரைத்தான்!.. பஞ்சாயத்தை முடித்து வைத்த வெங்கட்பிரபு!...

by சிவா |
venkat
X

விஜயும் அஜித்தும் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வருபவர்கள். இருவருமே காதல் படங்களில் நடிக்க துவங்கி பின்னாளில் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். இருவருக்குமே அதிகமான ரசிகர் கூட்டம் உண்டு. அஜித் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர்.

இது விஜய்க்கே ஆச்சர்யமாக இருந்தது. அஜித்தை போல தைரியமான முடிவு எடுக்கும் நபரை நான் பார்த்தது இல்லை என விஜயே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். விஜயும் அஜித்தும் இணைந்து ‘ராஜாவின் பார்வையிலே’ என்கிற படத்தில் நடித்தார்கள். அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இதையும் படிங்க:கதையை பிரசாந்த்தான் கேட்பார்… சூப்பர்ஹிட் படத்துக்கே நோ சொல்லிட்டார்.. இதையா மிஸ் பண்ணாரு?

ஒருகட்டத்தில் தான் நடிக்கும் படங்களில் மறைமுகமாக ஒருவரை ஒருவர் திட்டி வசனமும் வைத்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்கு வந்த பக்குவம் அவர்களை மாற்றியது. சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்து சண்டை போட்டுக்கொண்டு வந்தாலும் விஜய்க்கும் அஜித்துக்கும் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.

அஜித்தின் அப்பா இறந்தபோது உடனே நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார் விஜய். மாஸ்டர் பட ஆடியோ விழாவில் ‘நண்பர் அஜித் ஸ்டைலில் கோட் போட்டுக்கொண்டேன்’ என ஓப்பனாகவே சொன்னார் விஜய். மேலும், கோட் படத்தின் கதையை வெங்கட்பிரபு அஜித்திடம் சொன்னபோது ’விஜயை வைத்து எடு. மங்காத்தாவ விட 100 மடங்கு பெட்டரா வரணும்’ என சொல்லி வாழ்த்து சொன்னதாக வெங்கட்பிரபு சொல்லி இருந்தார்.

Venkat Prabhu-ajith-vijay

இந்நிலையில்தான், கோட் படத்தின் இறுதிக்காட்சியில் ‘நீ யாருடைய ரசிகை?’ என விஜய் தன் மகளிடம் கேட்க வில்லனாக வரும் குட்டி விஜயின் தலையில் மோதி தப்பிப்பார். அந்த காட்சியில் மங்காத்தா தீம் மியூசிக்கும் வரும். அந்த காட்சியில் நடித்த பெண் ஊடகம் ஒன்றில் ‘அது தல தோனியாகவும் இருக்கலாம்’ என சொல்ல அஜித் ரசிகர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘படத்தின் வெற்றிக்கு அஜித்தை பயன்படுத்திவிட்டு இப்போது தோனியா?’ என குறிப்பிட்டு ‘சுயநலவாதி வெங்கட்பிரபு’ என்கிற ஹேஷ்டேக்கில் வெங்கட்பிரபுவை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு ‘அந்த காட்சியில் அந்த பெண் நடிக்கும்போது பின்னணியில் என்ன மியூசிக் போட போகிறோம் என்பது அவருக்கு தெரியாது. மங்காத்தா பிஜிம் போட்டும் அது அஜித்தான் என்பது ரசிகர்களுக்கு புரியாமல் போனது ஆச்சர்யமாக இருக்கிறது. ரசிகர்கள் இவ்வளவு மக்காகவா இருப்பார்கள் எனக்கு இப்போதுதான் தெரியும்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

Next Story