இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்!.. கையெடுத்து கும்பிட்ட வெங்கட்பிரபு!.. பாவம் விட்ருங்கப்பா!...

by சிவா |
venkat
X

Goat trailer: சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறியவர் வெங்கட்பிரபு. கங்கை அமரனின் மகனான இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை மையமாக வைத்து சென்னை 28 படத்தை எடுத்தார். அந்த படத்தின் வெற்றி அவரை ஒரு ஹிட் பட இயக்குனராக மாற்றியது.

அதன்பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஆனால், அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படமும், சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படமும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்தே விஜயை வைத்து கோட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.

இதையும் படிங்க: தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?

இந்த கதையை பல வருடங்களுக்கு முன்பே அவர் அஜித்திடம் சொல்ல ‘இந்த கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும். மங்காத்தா மாதிரி 100 மடங்கு வரும்’ என சொல்லி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார் அஜித். இப்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது.

கோட் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியானாலும் இதுவரை டிரெய்லர் வீடியோ வெளியாகவில்லை. செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த 2 நாட்களாகவே கோட் படத்தின் டிரெய்லர் அப்டேட் வரும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் டிவிட்டரில் இதுபற்றி தொடர்ந்து பதிவிட்டு வந்தார். வெங்கட்பிரபுவும் இதுபற்றி சொல்லி வந்தார். நேற்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. எனவே, விஜய் ரசிகரள் கோபமடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், வெங்கட்பிரபு டிவிட்டர் பக்கத்தில் ‘இன்னைக்கு கண்டிப்பா வந்திடும்’ என பதிவிட்டு கை கூப்பி ரசிகர்களின் கோபத்தை கொஞ்சம் தணித்திருக்கிறார். சுதந்திர தினமான இன்று கண்டிப்பாக கோட் படத்தின் அப்டேட் வெளியாகிவிடும் என்றே கருதப்படுகிறது.

Next Story