சீக்ரெட்டா ஸ்கெட்ச் போட்ட வெங்கட்பிரபு!.. மண்ட மேல இருக்குற கொண்டய மறந்துட்டாரே!..

by சிவா |   ( Updated:2025-05-06 06:18:55  )
சீக்ரெட்டா ஸ்கெட்ச் போட்ட வெங்கட்பிரபு!.. மண்ட மேல இருக்குற கொண்டய மறந்துட்டாரே!..
X

Venkat Prabhu

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் வெங்கட்பிரபு. தன்னுடைய நட்பு வட்டாரங்களை வைத்து இந்த படத்தை எடுத்தார். சென்னையில் எல்லா ஏரியாவிலும் 10 பேர் கொண்ட நண்பர் குழு ஒன்று இருக்கும். அவர்கள் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவது, சரக்கடிப்பது, காதல் என ஜாலியாக இருப்பார்கள். இதை வைத்தே அந்த படத்தை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. வெங்கட்பிரபுவின் நண்பர் எஸ்.பி.பி.சரண் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார். அதில், அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா படம் அஜித்துக்கே முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை நெகட்டிவ் வேடத்தில் காட்டினாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை இப்படத்தின் வெற்றி நிரூபித்தது. அதுதான் குட் பேட் அக்லி படம் வரை தொடர்கிறது.

அதேநேரம், தொடர் ஹிட் கொடுக்காததால் வெங்கட்பிரபுவை நம்பி பெரிய ஹீரோக்கள் நம்பி கால்ஷீட் கொடுப்பதில்லை. ஏனெனில், மங்காத்தாவுக்கு பின் வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற படங்கள் ஓடவில்லை. எனவே, மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. ஒருபகக்ம், விஜயை வைத்து படமெடுக்கவும் பல முயற்சிகள் செய்தார் அதுவும் நடக்கவில்லை.

venkatprabu
#image_title

சிம்புவை வைத்து மாநாடு கொடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட். ஆனால், அதன்பின் இயக்கிய கஸ்டடி படம் ஓடவில்லை. ஒருவழியாக விஜய்க்கு கதை சொல்லி அவரை சம்மதிக்க வைத்து கோட் படத்தை எடுத்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்து சிவகார்த்திகேயனின் படத்த இயக்கவிருந்தார். ஆனால், கோட் ரிசல்ட்டை பார்த்துவிட்டு மனம் மாறினார் எஸ்.கே.

எனவே, விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற விரக்தியில் இருந்தார் விபி. இப்போது ஒருவழியாக சிவகார்த்தியனை சம்மதிக்க வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். விஜயின் கோட் பட வேலைகள் நடந்தபோது படத்தின் தலைப்பு வெளியே கசிந்துவிட்டது. எனவே இந்தமுறை அப்படி நடக்கக் கூடாது என நினைத்த வெங்கட்பிரபு தனது டீமை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு சென்றுவிட்டாராம். படம் தொடர்பான எந்த செய்தியும் வெளியே கசியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், இலங்கைக்கு போனதே தெரிந்துவிட்டது. மத்த விஷயம்லாம் தெரியாமயா போயிடும் என சொல்லி சிரிக்கிறார்கள் சில சினிமா புலனாய்வு பத்திரிக்கையாளர்கள்.

Next Story