நான் சி.எஸ்.கே ரசிகன்!.. கோட் படம் ஓடனலனா நான் ஒன்னும் பண்ண முடியாது!.. பொங்கிய விபி!...
Venkat prabu: இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் முயற்சிகள் செய்தார். எஸ்.பி.பி மகன் சரண் அவரின் நண்பர் என்பதால் அவரை தயாரிப்பாளர் ஆக்கி சென்னை 28 படத்தை எடுத்தார்.
வெங்கட்பிரபுவுக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார், டெஸ்ட் மேட்ச், ஐபிஎல், உலக கோப்பை என எல்லாவற்றையும் பார்ப்பார். அதிலும் இந்தியா விளையாடினாலும்,ஐபிஎல்-லில் சி.எஸ்.கே டீம் விளையாடினாலும் அதை மிஸ் பண்ணவே மாட்டார்.
இதையும் படிங்க: தளபதி 69-ல் மாஸ்டர் படத்தின் பிரபலம்!.. தட்டி தூக்கிய ஹெச்.வினோத்!.. பக்கா பிளான்!…
அவ்வளவு கிரிக்கெட் வெறியர்தான் வெங்கட்பிரபு. அவர் முதலில் இயக்கிய சென்னை 28 படத்தை கூட கிரிக்கெட்டை மையமாக வைத்தே எடுத்திருந்தார். அடுத்து எடுத்த சரோஜா படத்திலும் கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஹைதராபாத் செல்லும் நண்பர்கள் போகும் வழியில் என்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை.
இப்போது அவர் இயக்கி விஜய் நடித்து வெளியாகியுள்ள கோட் படத்தின் இறுதிக்காட்சியையும் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுத்திருந்தார். சி.எஸ்.கே டீம் விளையாடுவது போலவும், சிவகார்த்திகேயன் சி.எஸ்.கே டீம் டீசர்ட் அணிந்து வருவது போலவும் காட்சிகளை வைத்திருந்தார். மேலும், கோட் படத்தில் தோனியையும், விஜயையும் ஒரு காட்சியில் நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை.
கோட் திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசியுள்ள வெங்கட்பிரபு ‘ கோட் படத்தில் சி.எஸ்.கே. ரெஃப்ரன்ஸ் இருப்பதால் ஹிந்தி, தெலுங்கு ஆடியன்ஸிடம் படம் சரியான போகவில்லை என நினைக்கிறேன். நான் சி.எஸ்.கே. ரசிகன் என்பதால் MI & RCB ரசிர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள். இரத்தத்தால் நான் சி.எஸ்.கே சப்போர்ட்டர். அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது’ என சொல்லி இருக்கிறார்.
கோட் படம் ரிலீஸாகிவிட்ட நிலையில், அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அது தாமதமானால் சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். கண்டிப்பாக இதுவும் கிரிக்கெட்டை மையாக வைத்தே எடுப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஜெயம் ரவி-ஆரத்தி விவகாரத்து காரணம் இதானா? முக்கிய சேதியை உடைத்த பிரபலம்