சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா?!.. பிரேம்ஜி கல்யாண விஷயத்தில் கடுப்பான வெங்கட்பிரபு…

X

ரசிகர்களிடம் இளையராஜாவின் சகோதரராக பிரபலமானவர்தான் கங்கை அமரன். பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என எல்லாவற்றிலும் ஒரு இடத்தை பிடித்தவர். ராமராஜனை வைத்து இயக்கிய கரகாட்டக்காரன் படம் சில தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது. இவரின் மகன்தான் வெங்கட்பிரபு.

துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா என பல படங்களையும் இயக்கினார். இதில், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, முன்னணி நடிகர்கள் இவருக்கு கால்ஷீட் கொடுத்தனர்.

இப்போது விஜயை வைத்து கோட் படத்தை உருவாக்கி வருகிறார். வெங்கட்பிரபு தனது எல்லா படத்திலும் தனது தம்பி பிரேம்ஜியை நடிக்க வைப்பார். சென்னை 28, கோவா, சரோஜா ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் பிரேம்ஜி. சிம்பு மற்றும் ரஜினி ஸ்டலை பின்பற்றி நடிக்கும் நடிகர் இவர்.

அதோடு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பல படங்களில் உதவியாளராக இருந்திருக்கிறார். பல பாடல்களை பாடியும் இருக்கிறார். மாங்கா என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இவருக்கு 45 வயது ஆகிறது. ஆனால், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இவரின் திருமண பத்திரிக்கை வெளியானது. ஜூன் 9ம் தேதி திருத்தணியில் அவருக்கு திருமணம் என பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மூன்று முடிச்சி போடும் முரட்டு சிங்கிள்!.. வெளியானது பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை!..

இந்நிலையில், டிவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள வெங்கட்பிரபு ‘எங்கள் குடும்பத்தில் பல வருஷங்கள் கழித்து ஒரு நல்ல விஷயம் நடக்கவிருக்கிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?.. சொப்பன சுந்தரியை இப்போது யாரு வச்சிருக்கா? இது எல்லாதையும் விட பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்கிற கேள்விக்கு பதில் இது. பிரேம்ஜி தான் விரும்பிய பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்தோடு கைபிடிக்கவிருக்கிறார். மிகவும் எளிமையாக திருமணம் நடக்கவிருக்கிறது.

திருமண பத்திரிக்கையை ஒரு நண்பர் பகிர்ந்துவிட்டார். மணமகள் பற்றி பல வதந்திகளும் பரவுகிறது. விரைவில் புகைப்படங்களை பகிர்கிறேன். எங்கள் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருமண வரவேற்பில் எல்லோரையும் சந்திப்போம்’ என சொல்லி இருக்கிறார். அதோடு, விரைவில் கோட் அப்டேட் வரும் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.