யஷ் நடிப்ப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியாகியுள்ள படம் டாக்ஸிக். நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளர். ஜனநாயகன் படத்தினை தயாரித்த கேவிஎன் நிறுவனம் மிகபிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கேஜி எப் பிளாக்பப்ஸ்டர் வெற்றிக்கு பின் யஷ் நடிப்பில் வெளிவரும் அடுத்த படம் இது என்பதாம் இப்படம் மீது இந்திய அளவில் அதிக எதிர்பர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று வெளியான டாக்ஸிக் படம் குறித்து பிரபல விமர்சகர் வெங்கி ரிவியூஸ் என்பவர் தந்து ட்விடட்ர் ப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ,
படத்தில் கதாபாத்திரங்களுக்கு சரியான அறிமுகமே இல்லை. கதையில் தெளிவான ஓட்டம் கிடையாது. திரைக்கதை எந்த அளவுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால், இப்போது என்ன நடக்கிறது? என்று அடிக்கடி யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
#Toxic A Fairy Tale That Turns Into a Complete Nightmare for Everyone!
— Venky Reviews (@venkyreviews) August 26, 2026
A technically sound film buried under chaotic writing and exhausting execution. There are barely any proper character introductions, the narrative has no clear flow, and the screenplay gets confusing enough…
#Toxic – அனைவருக்கும் ஒரு முழுமையான கனவாக மாறும் Fairy Tale!* தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும், குழப்பமான எழுத்து மற்றும் சோர்வடையச் செய்யும் திரைக்கதை அமைப்பு காரணமாக படம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வசனங்களும் பலவீனமாக உள்ளன. அதைவிட மோசமாக இருப்பது எடிட்டிங். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் படத்தை ரசிக்க முடியாத அளவுக்கு மேலும் சிரமப்படுத்துகிறது.
யாஷின் திரைத் தோற்றம், ஒரு சில காட்சிகள் மற்றும் சற்று சிறப்பாகக் கையாளப்பட்ட கிளைமாக்ஸ் ஆகியவை மட்டுமே படத்தின் சில சாதகமான அம்சங்கள்.
மொத்தத்தில், இந்தப் படத்தைப் பார்ப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. மோசமான படம் என்று கூட சொல்ல முடியாது… இது நேரடியாக ஒரு மிகப்பெரிய தோல்வி என்று பதிவிட்டுள்ளார்.







