80, 90களில் கமெடி நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வெண்ணிற ஆடை படம் மூலம் அறிமுகம் ஆனவர் அவர். அந்த படம் ஹிட் அடிக்கவே அவரை வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்க துவங்கினர். தன்னுடைய முகத்தில் சில சேட்டை பாவங்களுடன் வித்யாசமான சப்தங்கள் தந்து நம்மை சிரிக்க வைப்பவர். நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி மற்றும் வடிவேலு என அனைத்து காமெடி நடிகர்களுடன் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் கவர்ந்து வருபவர் அவர். தற்போது வயோதிக காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
பொதுவாகவே அர்ஜூன் தனது படங்களில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு கேரக்ட கொடுப்பது வழக்கம். கற்பக வந்தாச்சு படத்திலிருந்து துரை, சின்னா,வேதம் என பல படங்களிலும் அவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க் வந்தார் அர்ஜூன்.
இந்த நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, அர்ஜூன் சார பத்தி ஒன்னு சொல்லியே ஆகனும். முதலில் அவர் படத்தில் நடிக்கும்போது சம்பளம் பேசிக் கொள்வேன். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்படபின்பு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டேன். அர்ஜூன் படமா எனன் அம்ப்ளம்னாலும் ஓகேனு சொல்லிடுவேன். அப்படி இருக்கையில் ஒரு படத்தில் அவருடன் நடித்தபோது எனக்கு சம்பளம் அதிகமாக கொடுத்துவிட்டார். அது குறித்து அவர்ரிடம் கூறினேன். அதற்கு அவர் உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துனக்க.. மீதியை சின்ன நடிகர்களுக்கு கொடுத்துடுங்க என்றார். மேலும் சர் உங்களுக்கு எப்போது பணம் வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்க என்றார். அவ்வலவு நல்ல மனிடஹ்ர் அர்ஜூன் சார் என்றார் வெண்ணிற ஆடை மூர்த்தி.