தமிழ் சினிமாவில் வெறும் நடிப்பை மட்டுமே வைத்து இன்றைய காலகட்டத்தில் சாதிக்க முடியாது என்ற நிலமை மாறி வருகின்றது. ஒரு நடிகன் என்பவன் நன்றாக ஆடவும் தெரியனும், பாடவும் தெரியனும், பாடல் எழுதவும் தெரியனும் என்பது போன்ற பிம்பத்தை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் உருவாக்கி வருகின்றனர்.
80களில் ஒரு சில நடிகர்கள் அப்படி இருந்தாலும் இந்த தலைமுறைகளில் பலரும் பன்முகத்திறமைகளோடு தான் சினிமாவிற்குள் நுழைகின்றனர். அந்த வகையில் யார் யாரெல்லாம் பன்முகத்திறமைகளோடு கூடிய நடிகர்களாக இருக்கிறார்கள் என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.
நடிகர் தனுஷ் : இவன்லாம் ஒரு நடிகரா? என ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களோடு சினிமாவிற்குள் வந்தவர் தான் தனுஷ்.ஒரு இயக்குனர் மகன்னா? யாருனாலும் ஹீரோவாகலாமா? என்ற பல விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் திறமை இருந்தால் யாருனாலும் நடிகராக முடியும் என்பதை உண்மையிலேயே நிரூபித்திக் காட்டியவர் தனுஷ். அதுவும் இன்று தமிழ் சினிமாவில் ஒரு வெர்ஸடைல் நடிகராகவும் வளர்ந்து நிற்கிறார். தயாரிப்பாளராக இயக்குனராக, நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக
தன் திறமைகளை காட்டி வருகிறார்.
நடிகர் சிம்பு : இவரின் சினிமா காலம் என்பது கிட்டத்தட்ட கமலை போன்றது. சின்னக் குழந்தையில் இருந்தே கேமராவை கையில் எடுத்தவர் சிம்பு. சினிமாவில் எல்லாமே இவருக்கு அத்துப்பிடி. இவரும் ஒரு பன்முக கலைஞராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் சிம்பு தன் நிலை என்ன என்பதை புரிந்து அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் : மிகக் குறுகிய காலத்தில் சினிமாவில் ஒரு டாப் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் ஆங்கராக பணிபுரிந்தவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்த பெருமை தனுஷை சேர்ந்தது என்றாலும் அடுத்தடுத்த தனது சொந்த உழைப்பாலும் கடின முயற்சியாலும் இன்று அஜித், விஜய் இவர்களுக்கு பிறகு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்கிறார். இவரும் ஒரு பன்முக கலைஞராக தன் பணியை திறம்பட செய்து வருகிறார்.
இவர்களை தாண்டி இவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் டி.ராஜேந்திரன். இவர்கள் இருவரும் சினிமா மீதும் கலையின் மீதும் தீராத அன்பு கொண்டவர்கள். சினிமாவில் இருக்கும் எல்லா துறைகளிலும் இவர்களின் பங்கீடு என்பது கண்டிப்பாக இருக்கும். ராஜேந்திரன் இயக்கும் படங்களில் இசையில் இருந்து எல்லாமே அவர் தான். அதே போல கமலும் ஒரு வெர்ஸடைல் நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க : எம்.எஸ்.வியிடமிருந்து காப்பி அடித்த கங்கை அமரன்… ஆனால் பாடல் செம ஹிட்… என்ன பாடல்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…