ரவிச்சந்திரன் உயிர்பிரியும் தருவாயில் நடந்த அதிசயம்!.. குடும்பமே கதறி அழுத சோகம்!..
50, 60களில் திரைத்துறைக்கு வந்த நடிகர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையின் காரணமாகவே சினிமா, நாடகம் என்று திரை வாழ்க்கையை தேடி வருவார்கள். ஆனால் நல்ல படிப்பு, ஓரளவு நல்ல குடும்ப சூழ்நிலை இருந்தும் சினிமா மீதுள்ள மோகத்தால் நடிக்க வந்தவர் தான் நடிகர் ரவிச்சந்திரன். புதுமை இயக்குனரான ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்ப்பட்டவர் தான் ரவிச்சந்திரன்.
நடித்த முதல் படமான காதலிக்க நேரமில்லை படத்தின் மூலமாக நடிகர் என்ற அந்தஸ்தை சுலபமாக பெற்றார் ரவிச்சந்திரன். அதனை அடுத்து தொடர்ச்சியாக சில வெள்ளி விழா படங்களை கொடுத்து முன்னனி நடிகராக திகழ ஆரம்பித்தார். அதே நேரத்தில் எம்ஜிஆருடன் பாசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் தான் நடிகை ஷீலா. இந்த படத்தில் நடிக்கும் போதே கேரளா சினிமா இவரை வரவேற்க தொடங்கியது.
வெம்மீன் என்ற தலைசிறந்த படத்தில் நடித்ததன் மூலம் கேரளாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடித்த இதயக்கமலம் படத்திலும் ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் ஷீலா. இதனால் ரவிச்சந்திரனுக்கும் ஷீலாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.
ரவிச்சந்திரன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றாலும் இவர்களின் காதல் முற்றிக் கொண்டே போனது. ஒரு சமயத்தில் ஷீலாவையும் திருமணம் செய்து இரு குடும்பமாக தனித்தனியே பார்த்து வந்தார் ரவிச்சந்திரன். பின் ஷீலாவுக்கு ஜார்ஜ் என்ற பையன் பிறந்தார். அவர் தான் இப்போது ஏகப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடித்து வரும் பிரபலமான நடிகர்.
இதையும் படிங்க : மக்களுக்காக சிவாஜி அள்ளிக்கொடுத்தது இம்புட்டு கோடியா?? நிஜ வாழ்க்கையிலும் கர்ணனா இருந்துருக்காரே!!..
ஒரளவுக்கு மேல் ஈகோ காரணமாக ரவிச்சந்திரனும் ஷீலாவும் பிரிந்து வாழத்தொடங்கியிருக்கின்றனர். ஜார்ஜ் அவரது தாயான ஷீலாவுடன் சென்று விட்டார். நாள்கள் செல்ல செல்ல ரவிச்சந்திரனுக்கு வியாதி, சர்க்கரை நோய் என நோய்கள் தொற்றிக் கொள்ள ஒரு கட்டத்தில் மரண படுக்கைக்கு சென்றிருக்கிறார். ஆனால் இவர் மனதிற்குள் மகன் ஜார்ஜ் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்குமாம்.
உறவினர்கள் எல்லாரும் வந்து பார்க்க இருந்தாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை ஏங்குவதாக உறவினர்கள் அறிந்து மகன் ஜார்ஜை வரவழைத்திருக்கின்றனர். மகன் ஜார்ஜை பார்த்ததும் கையை பிடித்துக் கொண்டு அதுவரை பேச்சு சைகை இல்லாத ரவிச்சந்திரன் கண்களில் இருந்து தார தாரையாக கண்ணீர் வந்திருக்கிறது.
இதை பார்த்துக் கொண்டு இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியத்தில் ஜார்ஜின் கையை பிடித்துக் கொண்டு அழத்தொடங்கியிருக்கின்றனர். அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து ரவிச்சந்திரன் உயிர் பிரிந்தாராம். இந்த செய்தி இணையத்தில் வந்து பார்ப்போரை மனம் உருக வைத்தது.