என்னது மைனாவின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா? நம்பியாருக்கே டஃப் கொடுத்தவர் ஆச்சே

by Rohini |
myna
X

myna

Serial actress Maina: சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒரு துணை கதாபாத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்ற நடிகை மைனா. கிராமத்து சாயலில் வசனங்களை பேசுவதில் இவரை அடிச்சுக்க யாரும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமாக வசனங்களை பேசுவதில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விக்ரம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற ஒரு சில படங்களில் மைனா நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் இடையே ஒரு தனி இடம் பிடித்தவர் மைனா. அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் பாடலைப் பாட முடியாமல் ஓடிய சந்திரபாபு… அதுல நடந்த களேபரத்தைப் பாருங்க..!

தற்போது சமூக வலைதளங்களில் பல ரீல்ஸ்களை போட்டு அதன் மூலமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இவருடைய கணவர் யோகேஷ். இவரும் ஒரு சீரியல் நடிகர் ஆவார். யோகேஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட மைனாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இப்போது குழந்தையுடன் மிகவும் சந்தோஷமாக தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார் மைனா. இந்த நிலையில் அவருடைய கணவர் யோகேஷை பற்றி யாரும் அறிந்திராத ஒரு விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

svr

svr

இதையும் படிங்க: கல்கியில் கமல் நடிக்க சம்மதிச்சதுக்கு இதுதான் காரணமா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?!

அதாவது பழம்பெரும் நடிகரான எஸ்வி ராமதாசனின் பேரன் தான் இந்த யோகேஷ் என்று சொல்லப்படுகிறது. எஸ் வி ராமதாஸ் அந்த காலத்தில் நம்பியாரை போன்ற ஒரு தோற்றமும் அவருக்கு நிகரான ஒரு வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் புகழ் பெற்றவர்.

ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய பேரன் தான் யோகேஷ் என்று இப்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 60களில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய எஸ் வி ராமதாஸ் 90கள் வரைக்கும் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story