இதுவரை திரைப்படத்துறையில் நடக்காத ஒன்று!.. ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பழம்பெரும் இயக்குனர்..

sridhar
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் ஓங்கி இருந்த காலம். மாடர்ன் தியேட்டர்ஸ், தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் நிறுவனம் என ஓங்கி இருந்ததை தன் பின் பி.யு,சின்னப்பா படம், சிவாஜி படம், எம்ஜிஆர் படம் என நடிகர்களின் பக்கம் திரும்ப வைத்த காலமாக மாறியது.
ஆனால் அதையும் இயக்குனர் பக்கம் திரும்ப வைத்தவர் பழம்பெரும் இயக்குனரான ஸ்ரீதர். இவரை புதுமை இயக்குனர் என்றும் அழைப்பதுண்டு. ‘தேவி’, ‘ நாதா’ என்று பேசப்பட்டு வந்த வசனத்தை அறவே மாற்றியவர் ஸ்ரீதர். பல படங்களுக்கு வசனங்களையும் எழுதியிருக்கிறார். புதுயுக காலத்திற்கேற்ப தன் படங்களை மாற்றினார்.

sridhar
இவரின் வசீகர அழகும் எடுப்பான தோற்றமும் பல இளம் பெண்களின் கனவு இயக்குனராகவே திகழ்ந்தார் ஸ்ரீதர். காதலின் உச்சமாக எடுத்தப் படம் தான் ‘ நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம். இந்தப் படத்தில் காதலின் ஆழத்தையும் அதனால் ஏற்படும் வழியையும் ஆழமாக புரிய வைத்தார்.
1962 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஸ்ரீதர் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி அதை விளம்பரமாக அச்சிட்டி வெளியிட்டார். அந்த விளம்பரத்தில் ‘அன்புள்ள ரசிகர்களுக்கு’ என்று ஆரம்பித்து படத்தை இந்த அளவுக்கு கொண்டு சென்றதுக்கு மனமார நன்றி என்றும் இனிவரும் காலங்களில் நான் ஏற்கப்போகும் புதுமைக்கும் தாங்கள் துணை நிற்க வேண்டும் என்று கூறி எழுதியிருந்தார்.

sridhar
அதுமட்டுமில்லாமல் அந்த கடிதத்தில் தன்னுடன் பணிபுரிந்த அனைத்துக் தொழில் நுட்பக் கலைஞர்களின் கையெழுத்துமிட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதை குறிப்பிட்டு பேசிய சித்ரா லட்சுமணன் ஸ்ரீதர் செய்த இந்த செயல் இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க : ஜோடியாத்தான் நடிக்க முடியல!.. ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கு தங்கச்சியாக நடிக்கும் 80’ஸ் நடிகை!..