Connect with us

Cinema History

இந்தக்காலத்தில் நீயே…கண்முன் வந்து தோன்றினாலும் நம்ப ஆள் இல்லையே….அடக் கடவுளே…!!!

விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை என விதவிதமாக நைவேத்தியம் செய்து படையல் சாற்றி ஒரு சிறுவன் பூஜை செய்ய கோவிலுக்கு வருகிறான்.

அப்போது பிள்ளையாரிடம் அவன் சொல்கிறான். எனக்கு எங்க அப்பா மாதிரி மந்திரம் எல்லாம் சொல்லத் தெரியாது. சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை எல்லாம் இருக்கு. வந்து சாப்பிடு என்கிறான். ஆனால் பிள்ளையார் சிலையாகவே இருக்கிறார். இதைக் கண்ட சிறுவன் அம்மா தான் சொன்னாங்களே.

நீ நல்லா சாப்பிடுவன்னு…நீ ஏன் சாப்பிடாம இருக்க…கதவு திறந்துருக்கான்னு அவன் கேட்டு கதவைப் பூட்டினான். இன்னும் ஏன் சாப்பிடாம இருக்க…நீ சாப்பிடலேன்னா அம்மா என்னைத் திட்டுவா…நான் செத்துப் போயிடுவேன். என பிள்ளையார் சிலையில் முட்டி முட்டி அழுகிறான்.

vetri vinayagar

சாப்பிடு என்று சொல்லிவிட்டு இலையில் இருந்த பலகாரத்தைத் தொட்டு விட்டு நான் சாப்பிட்டு விட்டேன் என்கிறார் பிள்ளையார். உடனே ஆ…ன் சும்மா தொட்டுப் பார்த்துவிட்டு சாப்பிட்டு விட்டேன் என்கிறாயா என கேட்க, திரும்ப பிள்ளையார் அனைத்தையும் சாப்பிட்டு விடுகிறார்.

பின்னர் கதவைத் திறந்து வெளியே வந்ததும் அடியார்கள் சிலர் சிறுவனிடம் பலகாரத்தைக் கொடு. நான் சாப்பிட வேண்டும் என்கின்றனர். பின்னர் பிள்ளையார் சாப்பிட்டு விட்டார் என அவன் சொல்வதைக் கேட்டு அனைவரும் அவன் பொய் சொல்வதாகக் கூறுகின்றனர். அவது அம்மா ஸ்ரீவித்யாவும் இதைப் பற்றி கேட்க பிள்ளையார் தான் சாப்பிட்டார் என்கிறான்.

உடனே அவனது அப்பா குருக்களும் இதைப்பற்றி கேட்க பிள்ளையார் தான் சாப்பிட்டார் என்கிறான். இந்த வயசுலேயே பொய்யா சொல்கிறாய் என கம்பால் அடிக்கிறார். அப்பா நான் பொய் சொல்லலப்பா என சிறுவன் கதறி அழுகிறான். அப்போது குருக்கள் சொல்கிறார். இருபது வருஷமா சாத்திரம் சம்பிரதாயத்தோடு நான் நைவேத்தியம் வைத்து பூஜை செய்கிறேன்.

vinayagar4

எனக்குத் தரிசனம் கொடுக்காத பிள்ளையார் ஓம்னு கூட சொல்லத் தெரியாத ஒன் பிள்ளைக்குத் தரிசனம் கொடுத்துட்டாரா என நொந்து கொள்கிறார். இரவு முழுவதும் தாயார் சிறுவனுக்கு அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கிறார். அவனும் பிள்ளையார் தாம்மா சாப்பிட்டாருன்னு அழுதபடியே சொல்லி தூங்கி விடுகிறான்.

அப்போது குருக்கள் ஸ்ரீவித்யாவிடம் குழந்தைத் தூங்கிட்டானான்னு கேடக ஸ்ரீவித்யா குழந்தையைப் பற்றி சொல்கிறார். பிள்ளையார் அப்பா… ஒரு தெய்வ குத்தமும் வந்துடக்கூடாதுன்னு சொல்லி ஸ்ரீவித்யா வேண்டுகிறார். மறுநாள் பூஜைக்கு நேரமாச்சு என ஸ்ரீவித்யா நைவேத்தியத்தை குருக்களிடம் கொடுக்க பிள்ளை யாருக்கு தன் மகனையே பூஜை செய்து நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்புகிறார். இன்னைக்கும் என் கையால தான் பிள்ளையார் சாப்பிடப் போகிறார்னு ஜாலியாக சொல்கிறான்.

Delhi Ganesh

கோவிலுக்குச் சென்றதும் பிள்ளையாரிடம் நடந்தவற்றை சொல்லி பிள்ளையாரப்பா வந்து சாப்பிடு என்கிறான். அப்போது குருக்கள் கதவின் துளை வழியாக உற்றுப் பார்க்கிறார். அப்போது பிள்ளையார் தோன்றி குழந்தாய் வந்தேன். என்ன வேண்டும் என கேட்கிறார். அப்பா நேற்று என்னை அடி அடின்னு நினைச்சாரு. என்ன யாருமே நம்பல என்றார். அப்போது பிள்ளையார் தம்பி இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். உன்னை நம்புவார்கள். உனக்கு என்ன தான் வேண்டும் என்று கேட்கிறார். எனக்கு ஞானம் வேண்டும் என்று சிறுவன் கேட்க அதையே வழங்குகிறார்.

தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைக்கட்டும் என வரம் கொடுக்கிறார். கதவின் வெளியே இருந்த குருக்கள் டெல்லிகணேஷிற்கு இது பரவசத்தையும் ஆனந்தப்பெருக்கையும் உண்டுபண்ணியது. மகிழ்ச்சிக்கடலில் அங்கிருந்து செல்கிறார். ஆனந்தப்பரவசத்தை தன் மனைவியிடமும் சொல்கிறாள். இந்தப் பரவச காட்சி வெற்றிவிநாயகர் என்ற படத்தில் இடம்பெறுகிறது.

1996ல் இந்த அற்புதமான பக்தி படம் வெளியானது. கே.சங்கர் இயக்கியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். கே.ஆர்.விஜயா, ராதாரவி, ஊர்வசி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். குருக்களாக டெல்லி கணேஷ_ம், அவரது மனைவியாக ஸ்ரீவித்யாவும் நடித்துள்ளனர்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top