தமிழ் சினிமாவின் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இன்னமும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி 2007 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அந்த படத்துக்கு பிறகும் பெரிய நடிகர்கள் வெற்றிமாறனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. மீண்டும் தனுஷ் உடன் இணைந்து ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருதையும் பெற்றுத் தந்தார்.
இதையும் படிங்க: ஜட்டியாவது போட்டிருக்காரா?.. அருண் விஜய்யின் அடுத்த பட டைட்டில் வெளியானது!.. எப்பவுமே தல ஃபேன் தான்!
ஆனால், அந்த படத்திற்கு பிறகும் வெற்றிமாறனுக்கு முன்னணி நடிகர்கள் வாய்ப்பு தரவில்லை. 2011-ஆம் ஆண்டு ஆடுகளம் படம் வெளியான நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து அட்டகத்தி தினேஷை வைத்து விசாரணை படத்தை இயக்கி இருந்தார் வெற்றிமாறன்.
அதன் பின்னர் மீண்டும் தனுஷை வைத்து வடசென்னை படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார். வடசென்னை இரண்டாம் பாகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு தனுஷுடன் மீண்டும் இணைந்தாலும் அசுரன் படத்தைக் கொடுத்தார்.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!
கடந்த ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலைப் படத்தை வெளியிட்டு பாராட்டுக்களை அள்ளிய வெற்றிமாறன் அடுத்ததாக அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என பல ஆண்டுகள் வெற்றிமாறன் முயற்சி செய்தும் முடியவில்லை. தளபதி 69-வது படத்தை அவர் இயக்குவார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!
விஜய் தான் கிடைக்கவில்லை சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்கலாம் என்று நினைத்த வெற்றிமாறனுக்கு இன்னமும் அந்த படத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானுக்கு கதை சொல்லி வந்த வெற்றிமாறனுக்கு கிடைக்காத வாய்ப்பு விஜய்யை வைத்து படம் இயக்கிய அட்லிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…