More
Categories: Cinema News latest news

பேரரசுக்கு மேடையிலேயே ஆப்பு வைத்த வெற்றிமாறன்!.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!..

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள கள்வன் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சமீபத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ரெபல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களை சோதித்து வருகிறது.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ், லவ் டுடே இவானா நடிப்பில் உருவாகி உள்ள கள்வன் படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ஜி.வி. பிரகாஷை பாராட்டுவதை விட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலாவை கொண்டாடினர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஸ்டேஜ்ல இருக்க மொத்த கண்ணும் உன்மேலத்தான் செல்லம்!.. சேப்பாக்கத்தை கவர்ச்சி மைதமானா மாத்திட்டாரே!..

கள்வன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பேரரசு இந்த படத்தில் யானை நடித்திருக்கிறது. யானை என்றால் பிள்ளையார் நல்லது தான். கும்கி போல இந்த படமும் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று பேசினார்.

அதன் பின்னர் மேடை ஏறி பேசிய இயக்குநர் வெற்றிமாறன், யானையை வைத்து படம் பண்ணாலும் சரி டைனோசரை வைத்து படம் பண்ணாலும் சரி கதை நல்லா இருந்தாதான் ஓடும் என சொல்லிவிட்டார். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து கள்வன் படத்தின் ரிசல்ட்டை அந்த படத்தின் மேடையிலேயே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே வெற்றிமாறன் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆக்சன் ரூட்டுக்கு மாறி மொக்கையான பரத்!.. வாய்ப்புக்காக வில்லனாக மாறிய சோகம்….

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Saranya M

Recent Posts