வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக வலம் வருகிறார். அவரது திரைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக பல உதவி இயக்குனர்கள் வெற்றிமாறனை முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் மனதில் நினைத்து வருகின்றனர்.
புரட்சிகர இயக்குனர்
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எப்போதும் வெற்றிமாறன் திரைப்படங்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஆதிக்கத்தையும் பேசக்கூடியவை. அந்த வகையில் “அசுரன்” திரைப்படம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமை கொடுமைகளையும் பேசியிருந்தது. அதே போல் “விடுதலை” திரைப்படம் போலீஸாரின் அராஜகத்தையும் அதிகார வர்க்கத்தின் வெறியாட்டத்தையும் பேசியிருந்தது. இவ்வாறு ஒரு புரட்சிகர இயக்குனராகவே வலம் வருகிறார் வெற்றிமாறன்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, டெங்கு காய்ச்சலிலும் வெற்றிமாறன் கடுமையாக உழைத்ததை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “அசுரன்” திரைப்படத்தை 2019 ஆம் ஆண்டின் ஆயுத பூஜை தினத்தன்று வெளியிட அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு முடிவெடுத்திருந்தார். ஆயுத பூஜைக்கு முந்திய வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தால் 5 நாட்கள் விடுமுறை தினத்தில் நன்றாக வசூல் பார்க்கலாம் என்று நினைத்து அவ்வாறு முடிவெடுத்தார் தாணு.
கடும் காய்ச்சலிலும் உழைத்த வெற்றிமாறன்
இந்த விஷயத்தை வெற்றிமாறனிடம் கூறினார் தாணு. வெற்றிமாறன் எப்போதும் தனது திரைப்படங்களின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிடுவார். ஆனால் படப்பிடிப்பிற்கு பிறகான எடிட்டிங் மற்றும் ரீரெகார்டிங் போன்ற போஸ்ட் புரொடக்சன் பணிகளை மிகவும் பொறுமையாக கையாளுவார்.
எனினும் கலைப்புலி எஸ்.தாணு விரைவில் “அசுரன்” திரைப்படத்தை முடித்துக்கொடுக்குமாறு கூறியபடியால், “நீங்கள் ஆயுத பூஜைக்கு படம் வெளியாகிறது என்று அறிவித்துவிடுங்கள். நான் உங்களுக்கு விரைவிலேயே முடித்துத் தருகிறேன்” என கூறினாராம்.
ஆனால் அத்திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சனின் போது வெற்றிமாறனுக்கு டெங்கு காய்ச்சல் வந்துவிட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் தான் கொடுத்த வாக்கிற்காக அத்திரைப்படத்தின் பணிகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன், படுக்கையில் இருந்தே எடிட்டிங் பணிகளை மும்முரமாக கவனித்து வந்தாராம்.
கடும் காய்ச்சலிலும் வெற்றிமாறன் தனக்காக இவ்வளவு கடுமையாக உழைப்பதை பார்த்த தயாரிப்பாளர் தாணு, “நீங்கள் தயவு செய்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். படத்தை வேண்டுமானால் தள்ளி ரிலீஸ் செய்துகொள்ளலாம்” என கூற, அதற்கு வெற்றிமாறன், ‘சார், நான் உங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அதனால் நான் கண்டிப்பா உங்களுக்கு முடிச்சிக்கொடுத்திடுவேன்” என கூறினாராம். இவ்வாறு கடும் காய்ச்சலிலும் தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கிறார் வெற்றிமாறன்.
இதையும் படிங்க: இப்படி ஆகிடுச்சே என் நிலைமை-கேரவானுக்குள் குமுறி குமுறி அழுத சிம்பு… ஏன் தெரியுமா?
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…