வன்மத்தை கக்கிய சூர்யா… வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்… இதெல்லாம் தேவையா பாஸ்?…

Published on: December 3, 2023
surya vetrimaran
---Advertisement---

Surya: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. பூவெல்லாம் கேட்டுப்பார், பிரண்ட்ஸ், நந்தா போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

மேலும் இவர் நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கியிருந்தார். இப்படம் அமீருக்கும் முதல் படமாகும். இப்படத்தின் போது சூர்யாவிற்கும் அமீருக்கும் இடைடே நல்ல ஒரு உறவும் இருந்தது.

இதையும் வாசிங்க:சார்லி சாப்ளின் வேஷம்தான் உனக்கு சரி… அப்படி சொன்ன பாலசந்தரையே பயப்படவச்ச நாகேஷ்…

ஆனால் தற்போது அமீருக்கும் சூர்யா குடும்பத்திற்கும் பலவித மனகசப்புகள் நிலவி வருகின்றன. அண்ணன் தம்பியாய் பழகிய இவர்களின் குடும்பம் ஞானவேல் ராஜாவால் பிரிந்ததாக அமீரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். பருத்திவீரன் படத்திற்கு பின்னரே இவர்களின் உறவில் கசப்பு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் சூர்யாவோ சில தவறான கண்ணோட்டத்தால் அமீர் மீது தொடர்ந்து வன்மத்தையே கக்கி வருகிறாராம். இதற்கு வாடிவாசல் திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவமே உதாரணம். வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீரும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அப்படத்தில் நடிக்கவிருக்கும் காளையுடன் சூர்யா பழகுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. அப்போது சூர்யா நான் முதலில் சென்று பழகுகிறேன்… அமீர் பின்னர் வரட்டும்… என கூறி அமீரை நிராகரித்தாராம்.

இதையும் வாசிங்க:சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டேன்… ஹீரோவான காரணத்தை உடைத்த அமீர்…

ஒரு நாள் சூர்யா வெற்றிமாறனிடம் சென்று அமீர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்குமே… நான் சொன்னால் மோகன்லால் வருவார்… என கூறினாராம். அப்போது அதை கேட்டு கடுப்பான வெற்றிமாறன் ‘என் கதையில் யார் நடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இஷ்டம் இருந்தா நடிங்க… இல்லைனா விலகிக்கோங்க’… என கூறிவிட்டாராம்.

ஆனால் அமீர் அப்படத்தில் நடிப்பதை விரும்பாத சூர்யா தற்போது அப்படத்தில் இருந்து விலகி கொள்ள போகிறார் எனும் செய்தி பரவுகிறது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனால் சூர்யா விலகினாலும் வெற்றிமாறன் இக்கதையை விடப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:கவர்ச்சி பாடகி இந்தப் பாடலை பாடுவதா? கேள்வி கேட்ட எம்.எஸ்.விக்கு தக்க பதிலடி கொடுத்த எம்ஜிஆர்

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.