தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக களமிறங்கிய வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக கவனம் பெற்றார்.
சிறந்து இயக்குனருக்கான இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்களே ஆசைப்படுகிறார்கள். ஷாருக்கான் கூட ஒரு முறை வெற்றிமாறனை அழைத்து பேசினார்.
வெற்றிமாறன் படத்தில் நடித்தால் தங்களின் இமேஜ் உயரம் என பெரும்பாலான நடிகர்கள் நம்புகிறார்கள். அவரை இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து அரசன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல மாதம் வேலைகள் நிறுத்தப்பட்டு தற்போது பட வேலைகள் துவங்கியிருக்கிறது..
இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘அரசன் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் இன்னொரு படத்தையும் தயாரிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கேஜிஎஃப் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அது வேற லெவலில் இருக்கும்’ என கூறியிருக்கிறார்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தைதான் சுருக்கமாக கேஜிஎப் என அழைக்கிறார்கள். ஏற்கனவே KGF, KGF 2 என்கிற தலைப்பில் பிரசாந்த் நீல் இரண்டு பாகங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். தமிழில் பா.ரஞ்சித் கூட சியான் விக்ரமை வைத்து கேஜிஎப் பின்னணியில் தங்கலான் என்கிற படத்தை இயக்கினார். இந்நிலையில்தான் வெற்றிமாறனும் KGF பின்னணியில் ஒரு கதையை இயக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
