
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் விடுதலை ஆகிய எல்லா படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இரண்டு முறை தேசிய விருது வாங்கி இருக்கிறார். தனுஷுக்கு இரண்டு முறை தேசிய விருதுகளை வாங்கி கொடுத்திருக்கிறார்..
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டாலும் எல்லோரிடமும் ஒரு தயக்கம் உண்டு. ஏனெனில், ஒரு படத்தை ஒன்றரை வருடத்திற்கு மேல் எடுப்பார்.. முழுக்கதையும் தயார்படுத்திக் கொண்டு படப்பிடிப்புக்கு போக மாட்டார்.. அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை எடுப்பார்.. பல நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு ‘இது நன்றாக இல்லை வேற ஒன்னு எடுப்போம்’ என்பார்.. அதனாலேயே அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் யோசிப்பார்கள்.
5 வருடங்களுக்கு முன்பு கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது.. இந்த படத்தை பார்க்க சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் அறிவிப்போடு பட வேலைகள் நின்று போனது. அதற்கு காரணம் வெற்றிமாறன் முழுக் கதையை உருவாக்கவில்லை..
கதையை முடிக்காமல் ஷூட்டிங் போனால் வெற்றிமாறன் ஒன்றரை வருடங்கள் படமெடுப்பார் என்பதால் முழுக் கதையை எழுதிவிட்டு வாருங்கள்.. நான் கால்ஷூட் கொடுக்கிறேன்’ என சூர்யா சொல்லிவிட்டார். எனவேதான் விடுதலை படத்தை இயக்கப் போனார் வெற்றிமாறன். அந்த படத்தின் 2 பாகங்கள் வெளியான பின் சிம்புவை வைத்து அரசன் என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறார்..
இந்நிலையில்தான் மீண்டும் வாடிவாசலை எடுக்கும் எண்ணம் வெற்றிமாறனுக்கு வந்திருக்கிறது இது தொடர்பாக சூர்யாவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது என்னால் தொடர்ந்து உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாது.. மாதத்தில் 10 நாட்கள் கொடுக்கிறேன்.. படத்தை எடுத்து முடித்து விடுங்கள்’ என சொல்லியிருக்கிறாராம் சூர்யா..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
