விடாமுயற்சியை தொடர்ந்து ‘வேட்டையன்’ படத்திற்கும் வந்த சிக்கல்! அப்போ பிரச்சினையே இதுதானா!..

by Rohini |
rajini
X

rajini

Vidamuyarchi Vettaiyan: கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பல பிரச்சினைகளை கடந்து இப்போது தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகிக் கொண்டு வருகிறது.

இவர்களுடன் ஆரவ் மற்றும் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்த படக்குழு நான்கு மாதங்களில் முடித்து ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் அஜர்பைஜானில் கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தது படக்குழு.

இதையும் படிங்க: அஜித் படத்தில் நடந்த சூப்பர் இன்ஸிடண்ட்.. அமிதாப்பே பார்த்து மெய்சிலிர்த்த சம்பவம்! பின்ன நாங்கலாம் யாரு?

அதனால் ஒட்டுமொத்த டீமும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். வேறொரு லொக்கேஷனை தேர்வு செய்யும் வரை விடாமுயற்சி டீமுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றளவும் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் அப்படியே இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக இணையத்தில் ஏதோ ஏதோ வதந்திகளை பரப்பி வந்தனர். அஜித் தாமதப்படுத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சினையே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சின்ன கப்பு வச்சி அத மறச்சா எப்படி!.. ஜூம் பண்ணி ரசிக்க வச்சிட்டாரே தமன்னா!…

இது பற்றி ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் ‘பணத்திலேயே புரளும் லைக்காவுக்கு பணப்பிரச்சினை இருப்பதாக செய்திகள் வெளிவருகிறதே? அது உண்மையா? அப்படி இருக்கும் பட்சத்தில் வேட்டையன் படம் மட்டும் எப்படி ஒழுங்காக நடைபெறுகிறது? லால் சலாம் படத்தின் போதும் பணப்பிரச்சினையால் ஐஸ்வர்யா தன்னிடம் உள்ள சொந்தக்காசை போட்டு படம் எடுத்தாராமே? அதுவும் உண்மையா?’ என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘லைக்காவுக்கு பணப்பிரச்சினை இருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் லால் சலாம் படத்தில் ஐஸ்வர்யா சொந்தக்காசை போட்டெல்லாம் படத்தை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் வேட்டையன் படமும் ஒழுங்காக நடைபெறவில்லை என்பதுதான் உண்மை’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அண்ணா விஜய் அரசியலுக்கு போயிட்டாரு!.. அடுத்து ஹாலிவுட் தான்!.. அட்லீ எடுத்த அதிரடி முடிவு!..

Next Story