தளபதியோட வம்புக்கே நிக்கிறீங்களே தலைவா… செப்டம்பரில் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?

by Akhilan |
தளபதியோட வம்புக்கே நிக்கிறீங்களே தலைவா… செப்டம்பரில் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?
X

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ராணா வில்லனாக நடித்திருக்க ஃபகத் பாசில் ரஜினிகாந்தின் மகனாக நடித்துள்ளாராம். ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: எஸ்.கே. இஷ்டத்துக்கும் பேசி கமலை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டாரே..! உலகநாயகன் இனி என்ன செய்வார்?

இப்படத்தின் முதற்கட்ட அறிவிப்பிலே இது ஒரு போலீஸ் சம்மந்தப்பட்ட கதை எனக் கூறப்பட்டது. எண்கவுண்டரை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தின் ரிலீஸை அக்டோபர் 10ந் தேதி வைத்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் ஒரு சிங்கிள் கூட வராத நிலையில் தற்போது இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 20ல் நடத்த படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரெடியா மாமே!.. போலீஸ் கெட்டப்பில் ரஜினி!.. அட ரிலீஸ் தேதியும் சொல்லிட்டாங்களே!….

ஏற்கனவே அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து கடந்த திரைப்படத்தில் கொளுந்துவிட்டு எரிந்தது. கொஞ்ச நாட்களாக அந்த பிரச்னை இல்லாமல் இருக்கும் நிலையில் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5ல் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆடியோ ரிலீஸும் அதே மாதத்தில் வைக்கப்பட இருப்பது இந்த விஷயத்துக்கு மீண்டும் தீனிப்போடப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story