ஒரே ஒரு சீன்!.. வேட்டையன் படத்தால் நடந்த பெரிய மேஜிக்.. தலைவர்னா சும்மாவா!..

Vettaiyan: ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படம் தற்போதைய கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பாகி இருக்கிறது. படம் குறித்து நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போதைய ஒரு சூப்பர் தகவலும் ரிலீஸாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் மகள் இயக்கத்தில் சின்ன வேடமாக லால் சலாம் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. அதை தொடர்ந்து வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியுடம் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…
இப்படத்தில் வில்லனாக ராணா நடிக்கிறார். கிட்டத்தட்ட ரொம்ப நாள் கழித்து ரஜினிக்கு இவர் மாடர்ன் வில்லனாகவே வர இருக்கிறார். வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகத் பாசில் ரஜினி மகனாக நடிக்கிறார். இவருக்கும் வில்லத்தனமான கேரக்டர் என்றே பேச்சுகள் அடிப்படுகிறது. த்ரிலிங்கான சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைப்பதால் பாடல்கள் ஹுக்குமை விட வேற லெவலில் இருக்க வேண்டும் என்பது படக்குழுவின் கோரிக்கையாக இருக்கிறதாம். பொதுவாக ரஜினிகாந்த் வெற்றி இயக்குனருக்கு அதிகமாக யோசிக்க மாட்டார். உடனே ஓகே சொல்லிவிடுவார் எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு பேரு வச்சவங்க இத செய்யாமலா இருப்பீங்க! மாயாவை பொழந்து கட்டிய கமல் – என்ன பேரு தெரியுமா?
இதில் ஒரு சுவாரஸ்ய விஷயம் இருக்கிறதாம். ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினி தூக்கிப்போட்ட உடன் கண்ணாடி அலேக்காக ஒட்டிக்கொள்ளும். அது விஎஃப்எக்ஸ் என்றனர் பலர். தற்போது படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அதன் வடிவமைப்பே இதானாம். இதை இரண்டு நாள் பயிற்சி செய்த ரஜினி மூன்றாவது நாளில் செய்து காட்டினாராம். மேலும் 3000 ரூபாய் மதிப்புள்ள இந்த கண்ணாடி இந்தியாவில் ஒரே நாளில் 15000 அளவில் விற்பனை ஆகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அப்போ ரஜினினா சும்மாவா..!