வேட்டையன் படத்தின் காட்சிகள் லீக்… இந்த முன்னணி பிரபலமும் இருக்காரா?
Vettaiyan: ரஜினிகாந்தின் வேட்டையன் படதின் முக்கிய காட்சிகள் தற்போது லீக்காகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது படக்குழுவை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலரின் வெற்றிக்கு பின்னர் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். டிஜே ஞானவேல் இயக்கத்தில் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை நாளுக்குப்பா இழுப்பீங்க… கோபியால் கடுப்பான ரசிகர்கள்…
இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பு செய்துவருகிறார். ஏறத்தாழ படத்தின் எல்லா படப்பிடிப்புகளும் முடியும் தருவாயை எட்டி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாக ராணாவும், காமெடி கலந்த ரோலில் ஃபகதும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் காட்சிகள் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரின் ஹூக்கும் வெற்றிக்கு பிறகு இன்னொரு பாடல் இந்த கூட்டணியில் அமையலாம் எனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: டாப் 5 நடிகைகளின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?!.. தட்டி தூக்கிய தமன்னா!…
இந்நிலையில் ஒரு பாடலில் அனிருத்தும் இடம்பெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் லீக்காகி இருக்கிறது. அனிருத் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கும் வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.