வேட்டையன் படத்தின் தற்போதைய நிலை என்ன?… ரிலீஸ் எப்போ தெரியுமா?

Published on: February 10, 2024
---Advertisement---

Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் வேலைகள் குறித்தும் அதற்கடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு சில சர்ப்ரைஸ் தகவலும் இருக்கிறது. 

கிட்டத்தட்ட ரஜினிகாந்த் அவ்வளவு தான் என சிலர் பேசி வந்த நிலையில் தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் சில சர்ச்சைகளை தாண்டி வெளிவந்ததால் பலரும் அந்த படத்தின் மீது ஆர்வம் காட்டினர். கிட்டத்தட்ட படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?

ரஜினிக்கு தற்போதைய காலத்தில் ஜெயிலர் கொடுத்த வசூலை மற்ற படங்கள் கொடுக்கவில்லை என்பதே உண்மை. ரஜினிகாந்துடன் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மல்டி ஸ்டார் வொர்க் அவுட்டாக ரஜினியை இதே ட்ரிக்கை தன்னுடைய அடுத்த படத்திற்கும் டிக் செய்து இருக்கிறார்.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தினை லைகா புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தில் ரஜினியுடன் அமிதாப், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சிமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தன் மகளை அந்த நடிகை போல ஆக்கனும்னு ஆசைப்பட்ட வனிதா! கடைசில என்னாச்சு தெரியுமா?

இதில் ராணாவுக்கு தான் வில்லன் வேடம் என்பதும் ஃபகத், ரஜினிகாந்த் மகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்துவிட்டதாம். இன்னும் 20 சதவீதமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மார்ச் மாதத்தில் அந்த 20 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171 படத்தில் இணைய இருக்கிறாராம். ஸ்கிரிப்ட் பணிகளில் லோகேஷ் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் வேட்டையன் படத்தினை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள். ஆனால் தற்போது இதுகுறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதை தற்போது சொல்ல முடியாது என ரஜினி கூறிவிட்டார்.

இதனால் வேட்டையன் படம் ஆகஸ்ட் மாதத்தில் தான் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். கிட்டத்தட்ட இந்த வருடத்தின் அடுத்த பாதியில் நிறைய மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸுக்கு தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கூட நடிச்ச ஆளுசார் நான்.. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்ட நடிகர்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.