விஜய் தூக்கத்தை கெடுக்க முடிவு கட்டிய ரஜினிகாந்த்?.. 300 கோடி, 1100 கோடின்னு எகிறுதே!..

by Saranya M |
விஜய் தூக்கத்தை கெடுக்க முடிவு கட்டிய ரஜினிகாந்த்?.. 300 கோடி, 1100 கோடின்னு எகிறுதே!..
X

நடிகர் ரஜினிகாந்த் 73 வயதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்வது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு வருவதுதான் மிகப்பெரிய விஷயம் என சினிமா வட்டாரத்தில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்துக்கு 280 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை ரஜினிகாந்த் சம்பளம் வாங்க போவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் 100 கோடியில் இருந்து தற்போது 200 ஐ தாண்டி 300 கோடி ரூபாய் வரை சென்று விட்டதா என பாலிவுட் முதல் டோலிவுட் வரை வாய்ப்பில்ல இருந்து பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் ஜூன் மாதம் லைகா நிறுவனம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை வெளியிட உள்ள நிலையில், இரண்டு படங்களுக்கும் சேர்த்து தற்போது பிசினஸ் டார்கெட் ஃபிக்ஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பாபி சினிமா, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இவ்வளோவா? கலக்குங்க!…

அதே அளவுக்கான வசூலை நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தையும் செய்ய வைக்க வேண்டும் என்கிற முடிவில் லைகா நிறுவனம் தீவிரமாக வேலைப்பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமம், ஓவர்சீஸ், மற்றும் மாநிலங்களின் தியேட்டர் உரிமம், ஆடியோ ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என ஒட்டுமொத்தமாக 1100 கோடி வரை வேட்டையன் படம் வசூல் செய்ய பிசினஸ் பிளானை பக்காவாக லைகா வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர். நடிகர் விஜய் 250 கோடி சம்பளம் உயர்த்தினால் ரஜினிகாந்த் சம்பளம் 300 கோடியாக செல்கிறதே என பலரும் பேச தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க: கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..

Next Story