கல்யாணத்திலையும் பிரச்னை செய்தாரா அந்த பிரபல தெலுங்கு நடிகர்..? விசித்ரா கணவர் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்..!

by Akhilan |
கல்யாணத்திலையும் பிரச்னை செய்தாரா அந்த பிரபல தெலுங்கு நடிகர்..? விசித்ரா கணவர் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்..!
X

Vichithra: பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு நடந்த பூகம்பமான ஒரு விஷயத்தினை போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் நடிகை விசித்ரா தனக்கு ஒரு நடிகர் படப்பிடிப்பில் கொடுத்த தொல்லையும் அதை தொடர்ந்து அவர் அனுபவித்த கொடுமையையும் சொல்லி இருந்தார்.

அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என்பதை ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து விட்டனர். இந்த சம்பவம் நடந்த போது அவருக்கு ரொம்பவே துணையாக இருந்தவர் விசித்ராவின் கணவரும், அப்போதைய ஹோட்டல் மேனேஜருமான ஷாஜி தான். அவர் இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவலை தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே பனிப்போரா? மீண்டும் இணையுமா இந்த வெற்றிக்கூட்டணி?

அதில் இருந்து, அந்த நடிகர் என்னுடைய படத்தின் பிரச்னை. நீங்க ஏன் சப்போர்ட் செய்றீங்க என்று என்னை மிரட்டினார். மேலும் அப்போது இந்த பிரச்னை குறித்து எனக்கு பெரிய அளவில் ஐடியா கிடையாது. அதை பார்த்தவர் விசித்ராவின் தந்தை தான். நான் அப்போ அந்த ஹோட்டல் மேனேஜராக இருந்தேன்.

எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன போது கூட அவர்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. விசித்ரா கொடுத்து இருந்த புகார் எல்லாம் அப்போதே நிலுவையில் இருந்தது. இதனால் அதை காலி செய்யவே எங்களை மிரட்டினர். திருமணம் முடிந்தும் கூட அதை வழக்குகள் சென்று கொண்டிருந்தது.

இதையும் படிங்க: இதனால் தான் விஜய் தளபதியாக இருக்கிறார்.. சங்கீதா க்ரிஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

அந்த படப்பிடிப்பில் விசித்ரா ரூமை கூட உடனே காலி பண்ண சொன்னார்கள். ரிட்டர்ன் டிக்கெட் கூட போடவில்லை. நாங்க ஹோட்டல் காரில் தான் ஏர்போர்ட் அழைத்து சென்று டிக்கெட் போட்டு அனுப்பி வைத்து வந்தேன். அது அவருக்கு பெரிய பாதிப்பை கொடுத்து இருக்கும்.

ஆனால் தினேஷ் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஆறுதலாக கூட பேச வேண்டாம். அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு இருக்கலாமே? இதே தினேஷ் தான் ப்ரதீப் விஷயத்தினை சொன்னப் போது எங்களிடம் சொன்னா கிழித்திருப்போம் என்றார். ஆனா இப்போ பேசிறார் எனக் குறிப்பிட்டார்.

Next Story