விஜய்கிட்டயா துப்பாக்கி வாங்கின!.. எஸ்.கே.வுக்கு ஜெர்க் கொடுத்த அஜித்!.. இதான் விஷயம்!...

by சிவா |   ( Updated:2024-09-07 15:39:30  )
siva
X

#image_title

Vidaamuyarchi: பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே அது வெளியாகும் ரிலீஸ் தேதிகள் ரசிகர்களாலும், ஊடகங்களாலும் அதிகம் கவனிக்கப்படும். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ரிலீஸ் தேதி எப்போது என தெரிந்துகொள்ள அவர்களின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள்.

80,90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன் போன்ற நடிகர்களின் படங்கள் ஒன்றாகவே வெளியாகும். மொத்த தியேட்டர்களை அனைத்து படங்களும் பங்கிட்டு கொள்ளும். அப்போது தமிழகத்தில் இப்போது இருப்பதை விட இன்னொரு மடங்கு திரையரங்குகள் இருந்தது.

இதையும் படிங்க: கோட் படத்தில் வெங்கட்பிரபு வச்ச செம டிவிஸ்ட்!. ஆனா யாருக்குமே தெரியாம போச்சே!…

ஆனால், சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாலும், பெண்கள் வீட்டில் சீரியலில் முடங்கிவிட்டதாலும் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது பெரும்பாலும் இளைஞர் கூட்டம் மட்டுமே படம் பார்க்க தியேட்டருக்கு வருகிறார்கள். எனவே, ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும் போது மற்ற நடிகரின் படம் வெளியாகாது.

விஜய் நடிப்பில் சமீபத்தில் கோட் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. விஜயின் போட்டி நடிகராக பார்க்கப்படுபவர் அஜித்குமார். இவரின் விடாமுயற்சி படம் துவங்கி 8 மாதங்கள் ஆகிவிட்டது. ஒருவழியாக இப்போதுதான் இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறார்.

இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என முன்பே சொல்லப்பட்டது. ஆனால், பல காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். ஆனால், இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது.

எனவே, தீபாவளிக்கு ரிலீஸ் செய்வோம் என அஜித் சொல்லிவிட்டாராம். விடாமுயற்சி தீபாவளிக்கு ரிலீஸ் என்றால் அமரன் பின் வாங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். கோட் படத்தில் விஜயிடம் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கி ‘நீங்க போங்க.. உங்க வேலையை நான் பார்த்துக்கிறேன்’ என சொல்வது போல ஒரு காட்சி வரும். இதனால்தான் சிவகார்த்திகேயனுக்கு அஜித் செக் வைத்திருக்கிறார் என கிண்டலாக சொல்லி சிரிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க: பிரசாந்த் கோட்ல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… இப்பவாவது சொன்னங்களே!…

Next Story