லியோ ஹரோல்ட் தாஸ் இப்போ விடாமுயற்சியில எப்படி இருக்காரு பாருங்க?.. வைரலாகும் அர்ஜுன் போட்டோ!..

மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து அர்ஜுன் நடித்த நடிப்பை எத்தனை வருடங்கள் ஆனாலும், ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அந்த படத்தை வெங்கட் பிரபு செம மாஸாக கொடுத்து கலக்கியிருப்பார்.

விஜய்யுடன் லியோ படத்தில் அர்ஜுன் இணையும் போதே ரசிகர்களுக்கு அதிக ஹைப் எகிறியது. அதிலும், ஹரோல்ட் தாஸ் என அவருக்கு இன்ட்ரோ க்ளிம்ஸ் வெளியாகி ஹைப்பை மேலும், ஏற்றியது.

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

ஆனால், படத்தில் பார்த்தால் ஹரோல்ட் தாஸை ஏட்டு ஏகாம்பரம் போல டம்மி பீஸாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசி வரை நீ லியோவா சொல்லு, லியோவை எப்படி வரவழைக்கிறேன் பாரு என வெறுப்பேத்தி விட்டார்.

இந்நிலையில், மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனை லோகேஷ் கனகராஜ் வீணடித்தது போல வீணடிக்க மாட்டார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:கடைசி 40 நிமிஷம் சூப்பர்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்.. ப்ளூ சட்டை கலாய்!..

லியோ படத்தில் நடித்த அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அர்ஜுனின் செம மாஸான ஒரு லுக் புகைப்படம் லீக் ஆன நிலையில், விடாமுயற்சி படத்தில் இந்த லுக்கில் தான் அர்ஜுன் நடிக்கிறாரா என அஜித் ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை விடாமுயற்சி தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காத அஜித் ரசிகர்களுக்கு இது செம அப்டேட்டாக மாறியுள்ளது. ஆனால், இது விடாமுயற்சி படத்தின் லுக் தானா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.

 

Related Articles

Next Story