விடாமுயற்சி விபத்தால் ஆரவிற்கு அடித்த லக்…இதற்காக தான் அஜர்பைஜானில் ஷூட்டிங்கா?

by Akhilan |   ( Updated:2024-04-06 19:46:28  )
விடாமுயற்சி விபத்தால் ஆரவிற்கு அடித்த லக்…இதற்காக தான் அஜர்பைஜானில் ஷூட்டிங்கா?
X

Vidamuyarchi: விடாமுயற்சி திரைப்படத்தின் வீடியோ வெளியானதை தொடர்ந்து ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் றெக்கைகட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் விடாமல் ஷூட்டிங் ஏன் அஜர்பைஜான் தான் நாட்டில் நடக்கிறது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை பிரபல விமர்சகர் செய்யார் பாலு தெரிவித்திருக்கிறார்.

அஜித் நடிப்பில் மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தின் டைட்டில் அறிவிப்பை தவிர பெரிய அளவில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் ஆரவ் தான் தொடர்ந்து அஜித் ஷூட்டிங் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…

பொதுவாக யாருக்குமே அத்தனை எளிதாக அனுமதி கொடுக்காத அஜித் மட்டும் ஏன் இத்தனை புகைப்படங்களை வெளியிட அனுமதி கொடுத்தார் என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஹாமர் காரில் நடந்த அந்த விபத்து தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ரேஸ் ஓட்டி பழக்கம் இருக்கும் அஜித் விபத்து ஏற்பட்டால் கூட தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் மனதிடம் அவரிடம் இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக ஆறவிற்கு இந்த விபத்தால் எதுவும் பெரிய காயம் ஏற்பட்டு அவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பது அஜித்தின் குற்ற உணர்ச்சியை தூண்டி விட்டதாம்.

இதைத் தொடர்ந்து அவருக்கு அத்தனை புகைப்படங்களையும் வெளியிட அனுமதி, தன்னுடைய பைக் ரேஸ் கூட்டத்தில் ஒரு ஆளாக சேர்த்துக் கொண்டது என பல சலுகைகளை ஆரம்பித்து கொடுத்திருக்கிறார் அஜித். இது மட்டுமல்லாமல் தன்னுடைய ரேஸ் டீமில் இணைந்த போது ஒரு புது ரேஸ் பைக்கையும் அவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: அம்மா சொன்னதால் மியூசிக் போட்ட இளையராஜா!.. இசைஞானிக்கு இவ்வளவு தாய்ப்பாசமா?!..

துணிவு திரைப்படத்தின் போது அவருக்கு அருகில் ஒரு டம்மி வெடி வெடிக்கப்பட்டதால் காதில் இருந்த சில நரம்புகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சத்தத்தை கேட்டாலே அஜித்திற்கு மிகப்பெரிய எரிச்சல் உருவாகுமாம். இதனால்தான் ரொம்பவே அமைதியான நாடாக இருந்த அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என அஜித் கேட்டுக்கொண்டாராம்.

அந்தக் குறிப்பிட்ட காது பிரச்சினையால்தான் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதுக்கும் மூளைக்கும் இடையான நரம்பில் சர்ஜரி செய்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் விடாமுயற்சி குறித்து மேலும் பல முக்கிய அப்டேட்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..

Next Story