More
Categories: Cinema News latest news

விடாமுயற்சியும் இதானா? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. துணிவுக்கு பின்னர் அஜித் எடுத்த முடிவு…!

Ajith Vidamuyarchi: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அதுவும் சரிதான் எனவும் பேசி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைனானில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மச்சினியிடம் கதையை திருடினாரா தனுஷ்.. நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்..!

இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அப்படி இப்படி நழுவி படப்பிடிப்புக்கே நவம்பரில் தான் அஜித் கலந்து கொண்டார். இதனால் இப்படத்தின் முதல் ஷெட்யூலே சமீபத்தில் தான் முடிந்தது. படத்தினை அடுத்த வருட பாதியில் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போதைய ஷெட்யூலின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் இருக்குமாம். அதையடுத்து ஒரு வார ப்ரேக்குக்கு பின்னர் புத்தாண்டு முடிந்து தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படமும் துணிவு படத்தினை போல ஒருநாளில் நடக்கும் கதையாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ப்ரதீப்புக்கு அடுத்த பலியாடு லோகேஷா?… உஷார் சாரே.. மாயாவின் அடுத்த ஸ்கெட்ச் இவருக்கு தான்..!

Published by
Akhilan

Recent Posts