Categories: Cinema News latest news

அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!

Vidamuyarchi: கோலிவுட்டே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் கூட டாப் ஹிட் நாயகனாக இருந்த அஜித்தின் சத்தம் மட்டும் காணவே இல்லை. எப்போ வருவார் என ஏங்கி கொண்டு இருந்தது என்னவோ ரசிகர்கள் மட்டும் தான். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் முடிவுக்கு ஏகே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி விட்டது.

துணிவு படத்தினை முடித்த கையோடு அஜித்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தது. நயன் ஜோடியாக நடிக்க கண்டிப்பாக இந்த படம் பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!

ஆனால் அஜித்தின் ட்விஸ்ட்டால் திடீரென விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இயக்குனர் மகிழ்திருமேனியை அஜித் அடுத்த இயக்குனராக ஓகே செய்தார். எப்போதும் இல்லாத திருநாளாக படத்தின் பெயர் அஜித்தின் பிறந்தநாளான மே1ல் அறிவிக்கப்பட்டது.

அதோட முடிஞ்சிச்சு என்ற ரீதியில் படக்குழு அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அஜித்தும் பல நாடுகளில் ஜாலியாக சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு வந்தார். இந்தோ அந்தோ என சொல்லி சொல்லி ஒருவழியாக இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. 

இதையும் படிங்க: ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

இதற்காக படக்குழுவினை சேர்ந்த 120 பேருடன் துபாயிற்கு சென்று இருக்கிறார்களாம். அங்கு தான் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அஜித் மற்றும் த்ரிஷா போர்ஷன்கள் இன்று தொடங்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இதை பெரிதாக ப்ரோமோஷன் செய்ய வேண்டாம் என அஜித் தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறதாம். அதனால் பெரிதாக லைகா எந்த விஷயத்தினையும் வெளியில் விடாமல் வைத்திருக்கிறதாக கூறப்படுகிறது.

Published by
Akhilan