More
Categories: Cinema News latest news

விடாமுயற்சி படத்தின் கதை இது தானா? சிம்பிளா அடிச்சாலும் மாஸா இருக்கணும் நினைப்பு போல..!

Vidamuyarchi: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது. மற்ற படம் போல் இல்லாமல் இந்த படம் ரொம்பவே சிம்பிளான கதையை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுவதாக பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வருகிறது விடாமுயற்சி திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா ப்ரோடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது. பெரும்பாலும் அஜித்தின் படத்தின் அப்டேட்டுக்கே ரசிகர்கள் ரொம்ப நாட்கள் காத்திருக்கும் நிலை சமீபகாலமாக நிலவி வருகிறது. 

Advertising
Advertising

இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

மற்ற படங்களுக்கு பெயர் அறிவிப்பே லேட்டாகும். ஆனால் இந்த படத்தில் விடாமுயற்சி பெயரை அறிவித்து விட்டு மற்ற முயற்சியே இல்லாமல் இருந்தது. அஜித் பொறுமையாக தன்னுடைய பைக் ட்ரிப்பை முடித்துவிட்டு அக்டோபரில் தான் ஷூட்டிங்கிற்கே வந்தார். 

அர்பைஜானில் பாதி படப்பிடிப்பு முடிந்து இருக்கும் நிலையில் படத்தின் பாதி வேலைகள் முடிந்து இருக்கிறதாம். பொதுவாக அஜித் ரீ டேக் போக மாட்டார். ஆனால் மகிழ் திருமேனி அதற்கு எதிரானவர். நிறைய டேக்குகள் எடுப்பாராம். இந்த படத்தில் இருவருக்கும் முட்டிக்கொள்ளுமா என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித் அவர் சொல்லியது போல ரீ டேக்கை நடித்து கொடுத்தாராம். இப்படத்தில் உமர் முக்தர் கேரக்டரில் அஜித் நடித்து இருக்கிறாராம். சாதாரண பள்ளி ஆசிரியராக அஜித் நடித்து இருக்கிறார். அவருடைய ஏரியாவில் நடக்கும் பிரச்னையை அஜித் எப்படி கையாளுவார் என்பதையே இப்படத்தின் கருவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினி, கமலுக்கு அப்புறம் தம்பி அஜித்தான்!.. அட நம்ம பிரபுவே இப்படி சொல்லிட்டாரே!…

Published by
Akhilan

Recent Posts